எடை இழப்பு குறிப்புகள்: உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு வகையான வைத்தியங்களை பின்பற்றுகிறார்கள். இன்று உடல் எடையை குறைக்க பல வகையான பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்றி அவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தானது. இப்படிப்பட்ட சில பொருட்களால் பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும். பலர் உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் தீவிரமான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். எனினும், பல சமயங்களில் இவற்றாலும் உடல் எடை குறைவதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில எளிய மற்றும் இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இயற்கையான வழிகளை பின்பற்றினால், பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. உடல் எடையை குறைக்க சமையலறையில் இருக்கும் சில இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்திய சமையலறையில் பல வகையான மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சூடான மசாலாப் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை சரியாகப் பயன்படுத்துவது பல கடுமையான நோய்களை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது. 


உடல் எடையை குறைக்க வெள்ளை மிளகு


கருப்பு மிளகைப் போலவே இருக்கும் வெள்ளை மிளகு, உடல் எடையைக் குறைக்க (Weight Loss) உதவுகின்றது. இதன் ஆற்றல் உடல் எடையை குறைக்க உதவும் வேறு எந்த மருந்துக்கும் குறைவானது அல்ல. இதனை தொடர்ந்து உட்கொள்வது உடல் எடையை குறைக்கவும், உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. எடையைக் குறைக்க வெள்ளை மிளகை எப்படி உட்கொள்வது என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம். 


எடை இழப்புக்கு வெள்ளை மிளகின் நன்மைகள்


வெள்ளை மிளகில் உள்ள சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால், அதைத் தொடர்ந்து பயன்படுத்தவும். வெள்ளை மிளகில் உள்ள பண்புகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு நீரிழிவு நோய், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளிலும் நன்மை பயக்கும். வெள்ளை மிளகில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆயுர்வேதத்தில் இது ஒரு மருந்தாக பயன்படுகிறது. வெள்ளை மிளகில் சரியான அளவு கேப்சைசின் உள்ளது. இதை பயன்படுத்துவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.  கேப்சைசின் பெரும்பாலான எடை இழப்பு மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிட கூடாது!


இது தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பைபரின், செலினியம், பீட்டா கரோட்டின், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் வெள்ளை மிளகில் உள்ளன. இதனை உட்கொள்வதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து கொழுப்பை எரிக்கும் செயல்முறை துரிதப்படுத்தப் படுகிறது. இது தவிர வெள்ளை மிளகில் நார்ச்சத்து உள்ளது. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் செரிமான மண்டலம் வலுவடைந்து, அது தொடர்பான பிரச்சனைகள் குறையத் தொடங்குகின்றன. 


உடல் எடையை குறைக்க வெள்ளை மிளகை எப்படி உட்கொள்வது?


வெள்ளை மிளகு பொதுவாக உணவில் சூடான மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பொடியை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம். கரம் மசாலாவை உட்கொள்வது உடலின் சரியான வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கவும், செரிமான பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது. தினமும் காலையில் வெள்ளை மிளகுத் தூள் கலந்த பானத்தை அருந்த வேண்டும். இதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெள்ளை மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதன் பிறகு, இந்த டீயில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கவும். வெறும் வயிற்றில் தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தூங்குவதற்கு முன்பு பாலில் கலந்து குடிக்க வேண்டியவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ