முருங்கை பொடியை இப்படி சாப்பிட்டு பாருங்க: உடல் எடை உடனே குறையும்
Weight Loss With Moringa: உடல் எடையை குறைக்க முருங்கை பொடியை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடை இழப்பு குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள். டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க முருங்கை பொடி
முருங்கை என்பது பூமி நமக்கு அளித்துள்ள இயற்கையான ஒரு பரிசு போன்றது. இது 300 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு மருந்துகளை விட அதிக நன்மை பயக்கும் குணங்களை கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தில், இது கடுமையான நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை பொதுவாக ஒரு காய்கறியாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது ஒரு காய்கறி மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் என்பது பலருக்கு தெரிவதில்லை. இதில் உள்ள சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கவும், பைல்ஸ் போன்ற கடுமையான நோய்களுக்கு நிவாரணம் அளிக்கவும் உதவுகின்றன.
முருங்கை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி அதை பயன்படுத்தலாம். எடை இழப்பு, உடல் பலவீனம், இரத்த சோகை மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகளில் முருங்கை பொடியை உட்கொள்வது நன்மை பயக்கும். உடல் எடையை குறைக்க முருங்கை பொடியை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க முருங்கை பொடியின் நன்மைகள்
பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முருங்கை பொடியில் காணப்படுகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உயிரியல் தாவர கலவைகள், ஐசோதியோசயனேட் மற்றும் நியாசிமினின் கலவைகள் உள்ளன. இதுமட்டுமின்றி கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் முருங்கையில் உள்ளன. உடல் எடையை குறைக்க முருங்கை பொடியின் பயன்பாடு பல மருந்துகளை காட்டிலும் சிறந்ததாக உள்ளது. முருங்கையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை சீராக்க உதவுகிறது. இது தவிர, முருங்கை பொடியை தொடர்ந்து பயன்படுத்துவது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவும்.
மேலும் படிகக் | நீங்கள் ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்திவிட்டால் உடலுக்குள் என்ன நடக்கும்?
முருங்கை இலைகளின் பொடியில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இதை உட்கொள்வது உடலில் உள்ள ஃப்ரீ-ரேடிக்கல்களைக் குறைக்க உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக, உடலில் உள்ள கூடுதல் கலோரிகள் விரைவாக எரிக்கப்படுகின்றன. உடல் எடையை வேகமாக குறைகக் நினைப்பவர்கள் முருங்கை தூள் டீயை தொடர்ந்து உட்கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க முருங்கை பொடியை எப்படி உட்கொள்வது?
- உடல் எடையை குறைக்க முருங்கை பொடியை பல வழிகளில் பயன்படுத்தலாம்.
- முருங்கை பொடி தேநீரை உட்கொள்ளலாம்.
- வீட்டில் முருங்கை டீ தயாரிக்க, முதலில் 1 டீஸ்பூன் முருங்கை பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடவும். கொதித்ததும் இந்த நீரை வடிகட்டி தேநீர் போல் உட்கொள்ளவும்.
- இது தவிர, வெதுவெதுப்பான நீரில் முருங்கைப் பொடியைச் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் நீர்ச்சத்து வரை…இளநீர் குடித்தால் உடலில் ஏற்படும் மேஜிக்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ