Onion For Weight Loss: அதிகரித்து வரும் உங்கள் எடையை கட்டுக்குள் கொண்டு வரவும், தொப்பையை கரைக்கவும் வெங்காயத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடையை குறைக்கவும், தொப்பையை கரைக்கவும், நீங்கள் பல்வேறு வழிகளை கடைபிடித்திருக்க  கூடும். வெங்காயத்தின் உதவியுடன் உடல் எடையை குறைக்க நினைத்ததுண்டா? ஆம், வெங்காயத்தின் உதவியுடன் உங்கள் அதிகரித்து வரும் எடையையும்  தொப்பை கொழுப்பையும் குறைக்கலாம்.  


நம் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற ஃபிளாவனாய்டு இருப்பதால், அதன் உதவியுடன் உடலில் சேரும் கொழுப்பைக் குறைக்கலாம். இது மட்டுமின்றி, இது உங்கள் வளர்சிதை மாற்ற செயல்முறையையும் சீர் செய்கிறது. வெங்காயம் புரோபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. 


அதோடு இதில் உள்ள கலோரி அளவும் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் உடல் பருமன் குறைவதோடு  தவிர வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அதிகரித்து வரும் உங்கள் எடையை கட்டுக்குள் கொண்டு வர வெங்காயத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்


வெங்காயத்தை  சாலட்டாக சாப்பிடுங்கள்


எடையை கட்டுக்குள் கொண்டு வர வெங்காயத்தை சாலட் வடிவில் சாப்பிடலாம். இதனுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.


வெங்காய சாறு


இரண்டு வெங்காயத்தை வேக வைத்து, ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். இப்போது அதை வடிகட்டி அதன் சாற்றில் உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்து சாப்பிடவும். இதுவும் உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.



மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்


வெங்காய சூப் 


வெங்காயத்துடன் மற்ற காய்கறிகளை கலந்து அதன் சூப்பை உட்கொள்ளலாம். இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, எடையைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR