Benefits Of Milk: இந்த நேரத்தில் பால் அருந்தினால் கிடைக்கும் அசத்தலான 5 நன்மைகள்
தினமும் ஒரு டம்ளர் பால் உட்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
Health Benefits of Milk: பால் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் விஷயங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் பால் உட்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
ஆனால் பால் (Milk) குடிக்க சரியான நேரம் எது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், பால் குடிக்கவும் உகந்த நேரம் உள்ளது. சரியான நேரத்தில் அதை உட்கொண்டால், அதன் பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும்.
பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் டி தவிர, கால்சியம், புரதம் மற்றும் லாக்டிக் அமிலம் ஆகியவை பாலில் உள்ளன. இவை உடலுக்கு பல நன்மைகளை வழங்க உதவுகின்றன. தினமும் பால் அருந்துவதால் நல்ல உறக்கம் கிடைக்கும்.
பால் உட்கொள்வதால் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மை என்ன?
உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங், தொடர்ந்து பால் உட்கொள்வதன் மூலம், பல நோய்களைத் தவிர்க்கலாம் என்கிறார். பால் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் பாலில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். அதுமட்டுமின்றி, பால் செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
காலை உணவின் போது பால் குடிப்பதால் ஏற்படும் அற்புத நன்மைகள்
1. நீங்கள் உடல் பருமன் (Obesity) பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தால், பால் உங்களுக்கு சிறப்பான தேர்வாக இருக்கும். புரதச்சத்து நிறைந்த பால் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்
2. காலையில் தினமும் பால் சாப்பிட்டு வந்தால் இரவில் நன்றாக தூங்கலாம். பால் குடிப்பதால், தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
3. பாலில் உள்ள புரதச்சத்து, ரத்தத்தில் டிரிப்டோபனின் அளவை அதிகரிக்கும். பாலில் உள்ள பண்புகள் மனச்சோர்வு பிரச்சனையை சமாளிக்க உதவும்.
4. காலையில் பால் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
5. எலும்புகள் உருவாகவும் வலுவாக இருக்கவும் கால்சியம் இன்றியமையாததாக கருதப்படுகிறது. காலை உணவின் போது பால் அருந்துவதன் மூலம் எலும்புகள் வலுவடையும்.
பால் குடிக்க சரியான நேரம் எது?
காலை உணவின் போது பால் உட்கொள்வது இரவில் நல்ல தூக்கத்தைப் (Sleep) பெற உதவும். உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், காலை உணவின் போது பால் உட்கொள்வது நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்று இல்லை. இவை உங்களுக்கு கல்வி கற்பதற்கான நோக்கத்துடன் மட்டுமே வழங்கப்படுகின்றன.)
ALSO READ | Weight Loss Tips: எடையை குறைக்க பாலை தவிர்க்க வேண்டுமா..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR