கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில், ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில்,  ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்பூட்னிக் -5 (Sputnik-5) தடுப்பூசியை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து ஒப்புதல் கிடைக்கும் என டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களின் தலைமை நிர்வாக அதிகாரி  தீபக் சப்ரா கூறுகையில், ஸ்பூட்னிக் -5 தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்காக டாக்டர் ரெட்டீஸ்  (Dr Reddy's) 'ரஷ்யா நேரடி முதலீட்டு நிதியத்துடன்' ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார்


டாக்டர் ரெட்டி ஆய்வகங்களின் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் சப்ரா, "அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார். இது இரண்டு டோஸ் தடுப்பூசியாக இருக்கும். முதல் டோஸ் போட்டுக் கொண்ட பிறகு 21 வது நாளில் இரண்டாவது டோஸ் கொடுக்கப்படும். தடுப்பூசி எடுத்துக் கொண்ட 28 முதல் 42 வது நாளுக்கு இடையில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஒரு வெபினாரின் போது, ஸ்பூட்னிக் தடுப்பூசி கிடைப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, ​​அவர் இந்த தகவலைக் அளித்தார்.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 68,020 புதியதொற்று (Corona Virus) பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது இந்த ஆண்டு பதிவான, தினசரி எண்ணிக்கையில் அதிக அளவாகும். இதுவரை நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 1.20 கோடியை தாண்டியுள்ளது என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. தொடர்ந்து 19 வது நாளாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளன.


உலகளவில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 12.70 கோடியாக அதிகரித்துள்ளது. உலக அளவில் இதுவரை இந்த நோயால் 27.8 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இந்த தகவலை வழங்கியுள்ளது. பல்கலைக்கழக அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தின் (CSSE) தரவுகளின்படி, தற்போதைய உலகளாவிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் இறப்புகள் எண்ணிக்கை முறையே 127,092,284 மற்றும் 2,782,944 ஆகும்.


ALSO READ | இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR