கொரோனா நோய்த்தொற்று, பரவும் வேகம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 62,714 புதிய தொற்று பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்திற்குள், கொரோனா தொற்று காரணமாக 321 பேர் உயிர் இழந்துள்ளனர்.
நாட்டில் மொத்த தொற்று (Corona Virus) பாதிப்புகளின் எண்ணிக்கை 1,19,71,624 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையும் 1,61,552 என்ற அளவை எட்டியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நாட்டில் 4,86,310 பேர் சிகிச்சையில் உள்ளனர், 1,13,23,762 பேர் இந்த நோயிலிருந்து குணம்டைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் பீகார் ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தெரிவித்துள்ளது.
ALSO READ | ஜூஸ் அல்லது டீயுடன் மருந்து சாப்பிடுகிறீர்களா? உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்
மகாராஷ்டிராவில் மொத்தம் 36 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த ஒரு வாரத்தில் மொத்த தொற்று பாதிப்புகளில் 59.8% தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, COVID-19 இறப்புகளில் 90% 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். மக்கள் கொரோனா நெறிமுறையை திவிரமாக பின்பற்றுவதில்லை என கூறியுள்ள சுகாதார அமைச்சகம், இன்னும் 44% பேர் மட்டுமே மாஸ்குகளை அணிகின்றனர் என கூறியுள்ளது. மக்களின் கவன்க்குறைவு தொற்று பரவுவதற்கான முக்கிய காரணமகா உள்ளது என கூறப்படுகிறது.
தில்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு திருமண மற்றும் பிற விழாக்களுக்கு மண்டபத்தின் திறனுக்கு ஏற்ப அதிகபட்சம் 50% அனுமதிக்கப்படும், அதிகபட்சம் 100 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். திறந்த வெளியில் நடத்தும் விழாக்களுக்கு, இடத்தின் அளவைக் கருத்தில் கொண்டு, அதிகபட்சம் 200 பேர் அனுமதிக்கப்படுவார்கள். இறுதி சடங்கு தொடர்பான நிகழ்வுகளில் அதிகபட்சம் 50 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முகமூடிகளை அணிவது, சமூக தூரத்தை பராமரித்தல், தெர்மல் ஸ்கேனிங் மற்றும் கை கழுவுதல் போன்றவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவிலும், கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள் இன்று முதல் காலை 8 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்படும். மீறினால் ரூ .1000 அபராதம் கிடைக்கும். மாஸ்க் அணியவில்லை என்றால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் துப்பினால் ரூ .1000 அபராதம் விதிக்கப்படும். அனைத்து பொது நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. முதல்வர் உத்தவ் தாக்கரே மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார், கொரோனா வைரஸைத் தடுக்க விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், ஹோலி எளிமையாக கொண்டாடப்பட வேண்டும் எனவும் அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
ALSO READ | ஒரு நாளில் எத்தனை முட்டை சாப்பிடலாம்.. கோடையில் முட்டை சாப்பிடலாமா..!!!