பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மான் கி பாத்’ மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தனது உரையில், பிரதமர் மோடி, கோவிட் -19 (COVID-19) பரவுவதைத் தடுக்க கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவு, உலகம் முழுவதிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது என்று கூறினார். மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் (Mithali Raj) மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து (PV Sindhu) ஆகியோரின் சாதனைகளையும் பிரதமர் பாராட்டினார்.
பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கீ பாத் 75வது நிகழ்ச்சி மைல்கல்லை எட்டியதால், இதற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி என பிரதமர் தெரிவித்தார்.
"இந்த 75 நிகழ்ச்சிகளில், ஆறுகள் முதல் இமயமலை சிகரங்கள் வரை, பாலைவனங்கள், இயற்கை பேரழிவுகள், மனிதகுலத்திற்கான சேவை கதைகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், தொலைதூர பகுதிகளிலிருந்து புதுமைகளின் கதைகள் வரை எண்ணற்ற தலைப்புகளைப் பற்றி விவாதித்தோம். நமது சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து, ஒரு குடிமகனாக நமது கடமைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். இதைப் பற்றி மகாத்மா காந்தி விரிவாக கூறியுள்ளார் " என்று பிரதமர் மோடி (PM Narendra Modi) கூறினார்.
ALSO READ | வங்கதேச சுதந்திர போராட்டம் எனது வாழ்நாளின் முதல் போராட்டம்: பிரதமர் மோடி
'பொது ஊரடங்கு உத்தரவு' பற்றி பேசிய பிரதமர், "கடந்த ஆண்டு மார்ச் மாதம், பொது ஊரடங்கு உத்தரவை நாம் கடைபிடித்தோம், இது முழு உலகிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. எதிர்கால தலைமுறையினர் பொது ஊரடங்கு உத்தரவை நினைவில் வைத்திருப்பார்கள்" என்றார்.
“உலகின் மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி பணி இன்று இந்தியாவில் நடந்து வருகிறது. உத்திர பிரதேசத்தின் ஜான்பூரில், 109 வயதானவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதேபோல், தில்லியில் 107 வயதான ஒரு நபர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருந்து எடுத்துக் கொண்டாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார் பிரதமர்.
தனது மன் கீ பாத் உரையில், விளையாட்டு வீராங்கனைகள் மிதாலி ராஜ் மற்றும் பிவி. சிந்து ஆகியோரைப் பாராட்டிய பிரதமர், “மார்ச் மாதத்தில் மகளிர் தினத்தை கொண்டாடும் போது, பல வீராங்கனைகள் சாதனைகளை நிகழ்த்தி, பதக்கங்களையும் பெற்றனர். தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஐ.எஸ்.எஸ்.எஃப் (ISSF) உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளின் போது இந்தியா முதலிடம் பிடித்தது. தங்கப் பதக்கங்களை வென்ற நாடுகளின் பட்டியலில், இந்தியா முதலிடத்திலும் வந்தது. ” என்றார் பிரதமர்
சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்து சாதனை புரிந்ததற்காக மிதாலி ராஜை பாராட்டிய அவர், பி.டபிள்யூ.எஃப் சுவிஸ் ஓபன் சூப்பர் 300 (BWF Swiss Open Super 300) போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவையும் பாராட்டினார்.
ALSO READ | சட்ட விரோத குடியேறிகளின் தலைநகராக இந்தியா இருக்க முடியாது: மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR