இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பழங்கள்! கொழுப்பை குறைக்கும் சிட்ரஸ் பழங்களின் மாயம்!
Food For cholesterol Control: அறிகுறிகளை ஏற்படுத்தாமலேயே பல நோய்களை உண்டாக்கும் கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்! கொலஸ்ட்ராலை எளிதாக கட்டுப்படுத்த வழிகள் இவை...
உடலின் தமனிகளில் படிந்திருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க, நமது உணவு முறை சரியாக இருப்பது அவசியம். கொலஸ்ட்ரால் நோயாளிகள் உணவு மூலம் தான், அது மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும், கட்டுப்படுத்தவும் முடியு . இன்றைய காலகட்டத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தீவிரமான பிரச்சனையாக மாறியுள்ளது. அறிகுறிகளை ஏற்படுத்தாமலேயே பல நோய்களை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்.
கொலஸ்ட்ரால் பாதிப்பு
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கத் தொடங்கும் போது, அது தமனிகளில் மெழுகு போல் படிவதால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், உணவு முறைகளில் மாற்றம் செய்வது அவசியம்.
உணவில் பழங்கள்
நமது உணவில் தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பழங்களுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களும், கனிமங்களும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றவை. அதிலும், சிட்ரஸ் பழங்களில் பி வைட்டமின்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் தாமிரம் உட்பட உடல் சீராக இயங்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நல்ல அளவில் உள்ளன.
கொழுப்பைக் கட்டுப்படுத்த சிட்ரஸ் பழங்கள்
அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட தாவர கலவைகள் நிறைந்த சிட்ரஸ் பழங்கள் உடலாரோக்கியத்துக்கு ஏற்றவை. ஏனென்றால், இந்த கலவைகளில் 60 க்கும் மேற்பட்ட வகையான ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன. இவைதான் சிட்ரஸ் பழத்தின் ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமாகின்றன.
நார்ச்சத்து ஆதாரம்
சிட்ரஸ் பழங்கள் நார்ச்சத்துக்கான நல்ல மூலம் என்பதில் சந்தேகம் இல்லை. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எடை இழப்புக்கு உதவுவதும் நார்ச்சத்தின் முக்கிய நமைகளாகும். பிற பழங்களுடன் ஒப்பிடுகையில், சிட்ரஸ் பழங்களில் கரையாத நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து அதிக விகிதத்தில் உள்ளன. இவை, கொழுப்பைக் குறைக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கலோரிகள் குறைவு
உடல் எடையைக் கூட்டாமல் இருக்கவும் சிட்ரஸ் பழங்கள் உதவுகின்றன. கலோரிகளில் குறைவாக இருந்தாலும், அவற்றின் நீர் மற்றும் நார்ச்சத்து பசியை அடக்கும் தன்மை கொண்டவை.
மேலும் படிக்க | டீக்கடைக்கு போனா இனி இதை வாங்கி குடியுங்கள்... உடலுக்கு மிகவும் நல்லதாம்!
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பழங்கள்
சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது.சிட்ரஸ் பழங்களை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. சிட்ரஸ் பழங்களில் உள்ள பல கலவைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சிட்ரஸ் பழங்களில் உள்ள பல சேர்மங்கள் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு பயனளிக்கின்றன.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Bad Combo: அசைவ உணவுகளுடன் சாப்பிட்டால் ஹார்மோன்களை சீர்குலைக்கும் உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ