1 கல்லில் 2 மாங்காய்! செரிமானம்-நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர்!

Herbal Drinks For Digestion: உலகம் முழுவதும் பலவிதமான தேநீர் வகைகள் இருக்கின்றன. இதில் செரிமான கோளாறுகளை சரி செய்யவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சில தேநீர்கள் உதவும். 

Written by - Yuvashree | Last Updated : Feb 3, 2024, 06:31 PM IST
  • உடல் நலனுக்கு நன்மை பயக்கும் தேநீர்.
  • செரிமான பிரச்சனைகள் தீரும்.
  • நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
1 கல்லில் 2 மாங்காய்! செரிமானம்-நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர்! title=

Herbal Drinks For Digestion and Immunity Boosting: நாம் அருந்தும் பானங்கள், நமது வாழ்க்கையை ஹெல்தியானதாக மாற்றிவிடும். குறிப்பாக பலருக்கு காலையில் எழுந்து டீ (தேநீர்) அருந்தவில்லை என்றால் கை,காலே ஓடாது. தேநீர் விரும்பிகளும் பலர் இங்கு உள்ளனர். இந்த டீயை ஹெல்தியான முறையில் உட்கொண்டால் உடலை நன்றாக பார்த்துக்கொள்ளலாம். இதனால், செரிமான கோளாறுகளும் சரியாகி நோயெதிர்ப்பு சக்திகளும் அதிகரிக்கும். 

துளசி மற்றும் அஸ்வகந்தா தேநீர்:

துளசி மற்றும் அஸ்வகந்தா ஆகியவற்றை கலந்து குடிக்கும் தேநீர், உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். துளசியில் holy basil என்ற ஒரு வகை ஃப்ளேவர் பொருந்திய தேநீர் வகையும் உள்ளது. இது, வளர்ச்சிதை மாற்றத்தை தவிர்க்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இந்த தேநீரை அருந்துவதால், உடல் நோய் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றுகளிடம் இருந்து விலகியிருக்கிறது. இதனால் உடல் கோளாறுகளும் ஏற்படாமல் தடுக்கலாம். 

மேலும் படிக்க | இதய நோயாளிகளே.. இந்த உணவுகளை மட்டும் மறந்து கூட சாப்பிடாதீங்க

புதினா மற்றும் இஞ்சி தேநீர்:

புதினா, புத்துணர்ச்சியூட்டும் உணவுகளுள் ஒன்று. புதினா-இஞ்சி ஆகியவற்றைக் கலந்து குடிப்பதால் செரிமான கோளாறுகள் சரியாகும். வாயுக்கோளாறு, வயிறு வீக்கம் உள்ளிட்டவையும் இந்த தேநீர் குறைக்கும். இஞ்சி ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், இது வயிற்றை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. இந்த சுவையான தேநீரைப் பருகுவதன் மூலம் உடல் ரிலாக்ஸ் ஆகும். இது நல்ல செரிமானத்திற்கு உதவவும்.

மஞ்சள் தேநீர்:

மஞ்சள் தேநீரை அனைவரும் தங்க பானம் என்றும் கூறுவர். இது, உடலில் உள்ள நச்சுத்தன்மையை குறைக்க உதவும். இதனுடன், கருப்பு மிளகு, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். உடலில் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் இந்த தேநீர் கொண்டுள்ளது. இந்த தேநீர் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நோயெதிர்ப்பு மண்டலத்தை சமநிலைப்படுத்தும் திறன் கொண்டதாகவும் உள்ளது. ஆபத்தான பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து உடலை காத்துக்கொள்ள உதவுகிறது. 

தேன், எலுமிச்சை இஞ்சி தேநீர்:

தேன், எலுமிச்சை மற்றும் இஞ்சியில் தனித்தனியாக நல்ல நலன்கள் உள்ளன. இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து டீயாக குடிப்பதால் நல்ல நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும். அதுமட்டுமன்றி, வைட்டைன் சி சத்துக்களை அதிகரித்து நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும். இதை குடிப்பதால் தொண்டை வலி, மூக்கடைப்பு, வளர்ச்சிதை மாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். 

இஞ்சி மற்றும் அதிமதுரம் தேநீர்:

சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேநீர் வகைகளுள் ஒன்று, இஞ்சி மற்றும் அதிமதுரம் கலந்த டீ. இதை தயாரிப்பதற்கு இஞ்சி, அதிமதுரம் பல் ஆகியவை தேவைப்படும். இது, நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தொண்டையை வலியை ஆற்ற உதவும். மேலும் இஞ்சி சளி மற்றும் இருமல் அறிகுறிகளை நீக்குவதற்கு நன்கு அறியப்பட்ட மூலிகையாகவும் உள்ளது. இந்த இரண்டு பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. சுவாச கோளாறுகள் வராமல் தடுக்க இந்த தேநீரை குடிக்கலாம். 

மேலும் படிக்க | Weight Loss: வேகமாக உடல் எடையை குறைக்க..‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்து பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News