பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi),  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் இன்று வீடியோ கான்பரென்ஸிங் மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ள நிலையில், இந்தியாவிற்கும், பிரிட்டனுக்கும் இடையில் 100 கோடி பவுண்டு மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம்  ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இதில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் 24 கோடி பவுண்ட் முதலீடும் அடங்கும். அதாவது, இந்திய ரூபாயில் 2400 கோடி முதலீடு செய்யப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீரம் இன்ஸ்டிடியூட்டின் உற்பத்தித் திறன் ஆறு மாதங்களுக்குள் ஆண்டுக்கு 250 கோடி என்ற அளவிலிருந்து 300 கோடி அளவிற்கு உயர்த்தப்படும் என்று அதார் பூனவல்லா கூறியிருந்தார்.

கொரோனா வைரஸுக்கான (Corona Virus) கோவிஷீல்ட் (Covishield) தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII), பிற நாடுகளில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக  செய்தி வெளியான நிலையில், அந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டது. 


ALSO READ | மத்திய அரசிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது: SII அதார் பூனவல்லா


இன்று இரு நாட்டின் தலைவர்களுக்கு இடையே நடக்கும் பேச்சு வார்த்தையின் போது,  இரு நாடுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம், பல்வேறு துறைகளில் ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கியமாக ஆலோசனை செய்யப்படும் என கூறப்படுகிறது. 


அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு  வலுப்பெற மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஒரு விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


இன்றைய ஆலோசனையில், இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பு, வர்த்தகம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, பருவநிலை செயல்பாடு மற்றும் சுகாதார நலம் ஆகிய  முக்கிய விஷயங்கள் இடம் பெறும் எனவும்  கூறப்படுகிறது. 


ALSO READ | சீரம் நிறுவனத்தின் CEO அதார் பூனவல்லாவுக்கு "Y" பிரிவு பாதுகாப்பு; காரணம் என்ன

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR