வைட்டமின் சி ஓவர்டோஸானால் ஏற்படும் நோய்கள்! சப்ளிமெண்ட்களை அளவா எடுத்துக்கோங்க
Vitamin C Overdose: அளவுக்கு அதிகமான வைட்டமின் சி உடலுக்கு ஆபத்தானது. இது சிறுநீரகம் மற்றும் எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒருவர் எப்போது எவ்வளவு வைட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும்?
வைட்டமின் சி நமது உடலுக்கு மிகவும் முக்கியமானது. இந்த சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இந்த வைட்டமின்களின் இருக்கும் நன்மைகள், அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது தீமையாக மாறி, உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். அதிகப்படியான வைட்டமின் சி உடலுக்கு ஆபத்தானது. இது சிறுநீரகம் மற்றும் எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. அதில் வைட்டமின் சி முக்கியமானது என்றாலும், ஆரோக்கியத்தை பாதுகாக்க, பிற ஊட்டச்சத்துக்களும் போதுமான அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்
அதிக அளவு வைட்டமின் சி உட்கொள்வதால், உடலில் சில பக்க விளைவுகள் தோன்றத் தொடங்குகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உங்கள் உடலில் தோன்ற ஆரம்பித்தால், வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் உணவுகளை குறைத்துக் கொள்ளவும் ஆனால் தவிர்க்க வேண்டாம்.
மேலும் படிக்க | இரவில் தயிர் சாப்பிடலாமா? இதனால் பிரச்சனை ஏற்படுமா?
சிறுநீரக கல் பிரச்சனை
அதிகப்படியான வைட்டமின் சி உணவு அல்லது சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது சிறுநீரக கல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனெனில் உடல் கூடுதல் வைட்டமின் சியை ஆக்சலேட் வடிவில் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. ஆனால், சில சமயங்களில் இது மற்ற தாதுக்களுடன் இணைந்து சிறிய படிகங்களாக மாறி சிறுநீரகக் கற்களாக மாறுகிறது.
அப்படி மாறும் கற்கள், உடலில் படிந்து நாளடைவில் வலி ஏற்படுத்தும். சிறு கற்களாக இருந்தால் அவை சிறுநீரில் வெளியேறிவிடும். படிகங்கள் பெரியதாக மாறினால், சிறுநீர் மூலமாக வெளியேறாமல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எலும்புகளின் அசாதாரண வளர்ச்சி
உடலில் அதிகப்படியான வைட்டமின் சி, எலும்புகளின் அசாதாரண வளர்ச்சியை ஏற்படுத்தும். எலும்புத் துருத்தல் ஏற்படலாம், இவை அடிக்கடி மூட்டுகளில் நிகழ்கின்றன, அங்கு எலும்பு அசாதாரணமாக வளர்ந்தால், இடம் இல்லாமல், வெளிப்புறமாக வெளியேறத் தொடங்குகிறது. இதன் காரணமாக, வலி மற்றும் பலவீனம் என பல அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். எனவே எலும்புகளில் வித்தியாசமான வளர்ச்சி ஏற்பட்டால், வைட்டமின் சி பழங்களையும், உணவுகளையும் குறைத்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க | கண்களின் பார்வையை காக்கும் சூப்பர்ஃபுட் உணவுகள்! கண்களைக் காக்கும் அற்புத உணவுகள்
செரிமான பிரச்சனை
வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதன் பொதுவான அறிகுறி செரிமானக் கோளாறுகளில் வெளிப்படும். அஜீரணம், வாந்தி, வயிற்று வலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். வைட்டமின் சி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்பவர்கள் உடனடியாக அதை நிறுத்துவதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
உடலில் ஊட்டச்சத்து சமநிலை சீர்கெடும்
அதிக அளவு வைட்டமின் சி உட்கொள்வது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சமநிலையை சீர்குலைக்கிறது. இது உடலில் வைட்டமின் பி12 மற்றும் தாமிரத்தின் அளவைக் குறைக்கலாம். அதே நேரத்தில், வைட்டமின் சி காரணமாக, உடலில் இரும்புச் சத்து அதிகமாகிறது, உடலில் அளவுக்கு மேல் இரும்புச்சத்து சேருவதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
வைட்டமின் சி சரியான அளவு எவ்வளவு?
வைட்டமின் சியை உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே, இந்த ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்க, வைட்டமின் சி உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டும். பொதுவாக, உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் வைட்டமின் சி அளவு அதிகரிக்காது, சப்ளிமெண்ட் மூலமாக வைட்டமின் சி எடுத்துக் கொள்ளலாம். புகைபிடிப்பவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இயல்பை விட அதிக வைட்டமின் சி தேவைப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை: உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ