முட்டை என்பது நமது உடலுக்கான ஒரு மிகவும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகின்றது. பொதுவாக முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. முட்டையில் அதிக புரதம் உள்ளது. இதனை அனைத்து பருவங்களிலும் தினமும் சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும் முட்டை சாப்பிடுவதும் உடலுக்கு ஆபத்தாகலாம். ஆம்!! ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை 60 சதவிகிதம் அதிகரிக்கும் என்று ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. 


ஆராய்ச்சியில் பெரிய வெளிப்பாடு


சீனாவின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வில் பங்கேற்ற 8,000 க்கும் மேற்பட்டோர் மூலம் கிடைத்த தரவுகளில், அதிக முட்டைகளை உண்பவர்களின் உடல் சுறுசுறுப்பு குறைவாக இருப்பதாகவும், சீரம் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அவர்கள் அதிக கொழுப்பு மற்றும் அனிமல் புரோடீனை உட்கொண்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


முட்டை உண்பவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்


முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படும் கோலின் ஆக்சிஜனேற்றம் மற்றும் வீக்கத்தின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள ரசாயனங்களிலிருந்து கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. முட்டை உலகெங்கிலும் உள்ள பல வீடுகளில் காலை உணவின் முக்கிய அம்சமாக உள்ளது. இது புரதத்தின் வளமான மூலமாகவும் உள்ளது.


முட்டையை அதிகம் சாப்பிடுவதால் வரக்கூடிய பொதுவான பிரச்சனைகள்:


- எடை அதிகரிப்பு


- அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து


- ஃபுட் பாய்சனிங் அபாயம்


- வயிற்று தொல்லை


மேலும் படிக்க | வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத 5 உணவுப் பொருட்கள் 


சால்மோனெல்லா என்ற பாக்டீரியா முட்டையில் உள்ளது. இது கோழியிலிருந்து வருகிறது. முட்டைகளை சரியாக வேகவைக்கவில்லை என்றால், இந்த பாக்டீரியாக்கள் உடலில் ஊடுருவி ஆரோக்கியத்தை சேதப்படுத்தும். முட்டைகளை சரியாக சமைக்காத போதும் இதே நிலை ஏற்படும். இது வீக்கம், வாந்தி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 


அதிக முட்டைகளை சாப்பிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். புரதத்தின் வளமான ஆதாரமாக இருப்பதால், அதை அதிக அளவில் உட்கொள்வது சிறுநீரகத்தை எதிர்மறையாக பாதிக்கும்.


அதிக முட்டைகளை சாப்பிடுவது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது


முட்டைகளை தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று பல நிபுணர்கள் நம்புகிறார்கள். ஒரு பெரிய முட்டையில் சுமார் 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 


முட்டை சாப்பிட சிறந்த வழி


முட்டைகளை உண்பதற்கான சிறந்த வழி, அவற்றை வேகவைத்து உப்பு, மிளகு மற்றும் கொத்தமல்லி இலைகளுடன் உட்கொள்வதாகும். இல்லையெனில் இரண்டு முட்டைகளைப் பயன்படுத்தி வெஜிடபிள் ஆம்லெட்டும் செய்யலாம்.


மேலும் படிக்க | Pulses vs Diabetes: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பருப்புகள் 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR