Pulses vs Diabetes: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பருப்புகள்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இந்த பருப்பு வகைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 19, 2022, 04:19 PM IST
  • நீரிழிவு நோயும் பருப்புகளும்
  • நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும் பருப்புகள்
  • உணவே மருந்து
Pulses vs Diabetes: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பருப்புகள் title=

நீரிழிவு ஒரு குணப்படுத்த முடியாத நோயாகும். சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயை குணப்படுத்தும் எந்தவொரு மருந்தும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பது இனிப்புக்கு எதிரான நோயின் கசப்பான உண்மை.

நீரிழிவு நோயை வேரோடு அழிக்க முடியாவிட்டாலும், அதை கட்டுக்குள் வைத்துக் கொள்வதும், உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்க நீரிழிவை அனுமதிக்காமல் பாதுகாப்பதும் நம் கையில் தான் இருக்கிறது.

ஆனால், இந்த நோயின் அறிகுறிகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது நமது வாழ்க்கை முறையைப் பொறுத்தது. நல்ல வாழ்க்கை முறையையும், உணவு பழக்கத்தையும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!

இல்லாவிட்டால் நீரிழிவு நோயாளிகள் நீரிழிவு நோயால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிலர் நீரிழிவு நரம்பியல் (diabetic neuropathy) போன்ற கடுமையான சிக்கல்களை உருவாக்கலாம் மற்றும் உடலின் ஒரு பகுதியை முழுமையாக வேலை செய்வதை நிறுத்தலாம். 

எனவே, வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். நீரிழிவு நோயாளிகளுக்கு பருப்பு வகைகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன.

மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு அதிமருந்தான வெந்தயத்தின் அற்புத நன்மைகள்

இருப்பினும், அனைத்து பருப்புகளும் நன்மை பயக்கும் என்று சொல்லிவிட முடியாது. சில சிறப்பு பருப்பு வகைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகின்றன.

சர்க்கரை நோயாளிகளுக்கு கடலை பருப்பு மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் அதன் கிளைசெமிக் குறியீடு 8 ஆகும். இதனுடன், பருப்பில் போதுமான அளவு புரதம் மற்றும் ஃபோலிக் அமிலம் காணப்படுகின்றன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

அதேபோல, பொட்டுக்கடலை, பாசிப்பயறு, தோல் நீக்காத உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை ஆகியவை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News