WHO on Diabetes: நீரிழிவு நோயின் மூன்றாம் வகை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் சஹாரா மற்றும் ஆசியாவில மூன்றாவது வகை நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயின் புதிய வடிவமானது ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு (MRD) என அழைக்கப்படுகிறது, மேலும் இது முதன்மையாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்ளது. நீரிழிவு நோய், குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஒரு உள்ளூர் நோயாக மாறியுள்ளதாக நம்பப்படுகிறது. உலகளவில் சுமார் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர், மேலும் இந்த நோய் ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்துகிறது என்று  உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலம் வரை, நீரிழிவு நோய் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நீரிழிவு நோய், வகை 1 மற்றும் வகை 2 என இரு வகை நோய்கள் சர்க்கரை நோய் என அறியப்பட்டுவந்தது. 2 அது வகை நீரிழிவு பெரியவர்களிடையே மிகவும் பொதுவானதாக அறியப்படுகிறது. ஆனால் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் மற்றொரு வகை நீரிழிவு நோய் உள்ளது.


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற 5 டயட் உணவுகள்


ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு (MRD) என அழைக்கப்படும், மூன்றாவது வகை நீரிழிவு நோய், ஐன்ஸ்டீன் குளோபல் நீரிழிவு நிறுவனத்தின் (EGDI) ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது. நீரிழிவு நோயின் புதிய வடிவத்தின் கண்டுபிடிப்பை டயபடீஸ் கேர் என்ற மருத்துவ சஞ்சிகையில் விஞ்ஞானிகள் அறிவித்தனர், MRD உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது என்று இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


MRD வகை நீரிழிவுக்கும் பிற இரு வகை நீரிழிவு நோய்க்களுக்குமான வேறுபாடு


வகை 1 நீரிழிவு: ஒருவரின் கணையத்தில் சுரக்கும் இன்சுலின் சிறிதளவு இருப்பதோ, அல்லது இன்சுலின் சுரப்பே இல்லாத நிலையில் முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த வகை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த ஓட்டத்தில் இரத்த சர்க்கரை அளவு அல்லது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு இன்சுலினை மருந்தாக செலுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே இது இன்சுலின் சார்ந்த நீரிழிவு என்றும் குறிப்பிடப்படுகிறது.



மரபணு காரணிகளைத் தவிர, வகை 1 நீரிழிவு நோய் சில வைரஸ்களால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. இந்த வகை நீரிழிவு பொதுவாக குழந்தை பருவத்திலோ அல்லது இளமை பருவத்திலோ தோன்றும் என்பதால், இது ஒரு காலத்தில் இளம் நீரிழிவு என்று குறிப்பிடப்பட்டது. இருப்பினும், இது பெரியவர்களையும் பாதிக்கலாம்.


மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்


வகை 2 நீரிழிவு நோய்: இது முன்னர் இன்சுலின் சார்ந்த அல்லாத அல்லது வயது வந்தோருக்கான நீரிழிவு நோய் என்று அறியப்பட்டது. உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போது இந்த வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது.


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் (95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்) வகை 2 நீரிழிவு நோயைக் கொண்டுள்ளனர், இது முக்கியமாக அதிக உடல் எடை மற்றும் உடல் செயலற்ற தன்மையால் ஏற்படுகிறது. இந்த வகை நீரிழிவு பொதுவாக பெரியவர்களிடம் காணப்பட்டாலும், குழந்தைகளிடமும் இரண்டாம் வகை நீரிழிவின் பாதிப்பு அதிகரித்து வருவது கவலை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.



ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய்: இதன் பெயரே குறிப்பிடுவது போல, ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நீரிழிவு மூன்றாம் வகை நீரிழிவாக கூறப்படுகிறது, இந்த நீரிழிவு ஏர்படுவதற்கு சரியான காரணங்கள் இன்னும் தெளிவாக இல்லை.


EGDI விஞ்ஞானிகளின் அறிக்கையின்படி, இந்த வகை நீரிழிவு 60 க்கும் மேற்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் பரவலாக உள்ளது, ஆனால் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் இது அரிதாகவே காணப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் சுரப்பதில் மிகவும் ஆழமான குறைபாட்டைக் கொண்டுள்ளனர் என்று EGDI இன் ஸ்தாபக இயக்குனர் மெரிடித் ஹாக்கின்ஸ் கூறுகிறார்.



எம்ஆர்டி நீரிழிவுக்கான சிகிச்சை என்ன? டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள், குறிப்பாக கணையத்தில் இருந்து இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும் மருந்துகள், புதிய வகை நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படலாம்.


கர்ப்பகால நீரிழிவு
கர்ப்பகால நீரிழிவு எனப்படும் மற்றொரு வகை நீரிழிவு நோய் உள்ளது, இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது மற்றும் பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு மறைந்துவிடும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இன்சுலின் சுரப்பில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.


இது இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். இந்த நிலை பொதுவாக கர்ப்பத்தின் நடுப்பகுதியில் தோன்றும். கர்ப்பகால நீரிழிவு தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். இது எதிர்காலத்தில் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.


மேலும் படிக்க | பலாப்பழம் உண்ட பின் சாப்பிடக் கூடாத சில உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ