ஆண்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்புக்கான அறிகுறிகள்!

ஆண்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை ஒருசில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 12, 2022, 08:52 PM IST
ஆண்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்புக்கான அறிகுறிகள்! title=

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரக்கூடிய பாதிப்பாக மாறிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், ஆண்களுக்கு சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது உடல் என்ன சமிக்ஞையை அளிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். 

மோசமான வாழ்க்கை முறை மற்றும் சமச்சீரற்ற உணவுப்பழக்கம் காரணமாக, இன்றைய காலகட்டத்தில் உலக மக்கள் தொகையில் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடலில் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் இருக்கும்போது நீரிழிவு பிரச்சினை ஏற்படுகிறது. அதே சமயம் சர்க்கரை நோயினால் உங்கள் உடலில் வேறு பல பிரச்சனைகள் வரலாம்.அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்களுக்கு சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது உடல் சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். 

மேலும் படிக்க | Weight Loss Tips: எந்த டயட்டும் வேண்டாம், இதெல்லாம் செஞ்சாயலே போதும்

சோர்வு 
உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது உங்கள் உடல் சோர்வாக இருக்கும். பொதுவாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மேலும் இதன் காரணமாக நீங்கள் சோர்வாகவும் உணரலாம்.

புண்கள் மற்றும் காயங்கள் குணமாகாது

உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் காயங்கள் விரைவில் குணமடையாது. இந்த அறிகுறிகளையும் நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

திடீர் எடை இழப்பு

நீரிழிவு நோயில் திடீர் எடை இழப்பும் அடங்கும். சர்க்கரை வியாதி வந்த பிறகு, நல்ல டயட் எடுத்தாலும், வேகமாக உடல் எடையை குறைக்கலாம். சர்க்கரை நோயினால் உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பால் உங்களுக்கு இந்த பிரச்சனை வரலாம்.எனவே உங்களுக்கு திடீரென உடல் எடை குறைய ஆரம்பித்திருந்தால் அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.

அடிக்கடி வயிற்று வலி

சர்க்கரை நோய் பிரச்சனையில் நோயாளிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் பிரச்சனையும் இருக்கலாம்.உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அலட்சியப்படுத்தாதீர்கள்.

மேலும் படிக்க | விந்தணு அதிகரிப்பால் கிடைக்கும் நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News