தயிர் அனைத்து இந்திய குடும்பங்களிலும் சாப்பிடப்படும் ஒரு முக்கிய உணவு வகையாகும். இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, மிகச்சிறந்த கிரீமி புரோபயாடிக் ஆகவும் உள்ளது. பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் தயிர் ஒரு மிகச்சிறந்த உணவுப்பொருளாகும். இதில் உள்ள கூறுகள் காரணமாக இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் கால்சியம் குறைபாட்டை தடுக்கிறது. பாலில் உள்ள லாக்டோஸிலிருந்து லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்வதால், லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தயிரை உட்கொள்ள முடியும். தயிர்  நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உற்பத்தி செய்கிறது. இது ஜிஐ பாதையில் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தயிர் தாது உறிஞ்சுதல் மற்றும் பி வைட்டமின் தொகுப்பு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. ஆண்டிபயாடிக்ஸ் உட்கொள்ளும்போது தயிர் எடுத்துக்கொள்வது ஆண்டிபயாடிக் தொடர்பான வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கிறது அல்லது குறைக்கிறது. 


மேலும் படிக்க | Health Care Tips: உங்கள் உடலில் வைட்டமின் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள் 


தயிரை நாம் பல வித உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுகிறோம். வயிறு சரி இல்லாதபோது வெறும் தயிர் சாதம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. செரிமானத்திற்கு உதவுவது முதல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை இது சந்தேகத்திற்கு இடமின்றி நமது உணவிற்கு ஒரு சரியான நிரப்பியாக செயல்படுகிறது. இருப்பினும், நீங்கள் ஒரு பாரம்பரிய இந்திய குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருந்தால், இரவில் தயிர் உட்கொள்ளக்கூடாது என்று உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் இதைப் பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா? 


இரவில் தயிர் சாப்பிடலாமா? 


தயிரில் பல நன்மைகள் இருந்தாலும், அதில் பல பக்க விளைவுகளும் உள்ளன. ஆயுர்வேதத்தின்படி இரவில் தயிர் சாப்பிடக் கூடாது என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


- இரவில் தயிர் சாப்பிடுவது ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப்படவில்லை. ஏனெனில் இது சளி உருவாவதற்கு காரணமாகிறது. தயிரில் இனிப்பு மற்றும் புளிப்பு ஆகிய இரண்டு அம்சங்களும் இருப்பதால், இதை இரவில் சாப்பிடுவதால் நாசிப் பாதையில் சளி உருவாகலாம்.


- கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் தயிர் சாப்பிடக்கூடாது. தயிர் ஒரு புளிப்பு உணவு. புளிப்பு உணவுகளால் மூட்டு வலி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன. 


- பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்கள் இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் அடிக்கடி அமிலத்தன்மை, அஜீரணம் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், உங்கள் செரிமானம் சீராக இல்லை என்று அர்த்தம். அத்தகைய சூழ்நிலையில், ​​​​பொதுவாக இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.


- லாக்டோஸ் அதாவது பால் சார்ந்த உணவுகளின் சகிப்புத்தன்மை இல்லாதவர்களால் தயிரை ஜீரணிக்க முடியும், ஆனால் பால் ஜீரணம் ஆகாது. இருப்பினும், உங்கள் தயிர் நுகர்வை நீங்கள் குறைக்க வேண்டும். இவர்கள் அதிக இடைவெளி விட்டு தயிர் சாப்பிடுவது நல்லது. 


- சளியை ஊக்குவிக்கும் தன்மை இருப்பதால், ஆஸ்துமா, இருமல் மற்றும் சளி மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பகலில் அல்லது மதியம் தயிர் சாப்பிடுவது நல்லது.


- தயிர் சிலருக்கு மிகவும் கனமாக இருக்கும். மலச்சிக்கலையும் ஏற்படுத்தும். ஆனால் பொதுவாக அதிகப்படியான உட்கொள்ளல் மூலம் மட்டுமே இந்த பிரச்சினை ஏற்படுகிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு  முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கண்களில் இந்த பிரச்சனைலாம் இருக்கா? கொலஸ்ட்ராலாக இருக்கலாம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ