Weight Loose TIPS: தயிர் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேர்ந்து உடல் எடை அதிகரிக்கும் என்று சிலர் நம்புகின்றனர், ஆனால் தயிர் சாப்பிடுவது உடல் எடை குறைப்பில் உதவுகிறது. நமது டயட்டில் தயிர் ஒரு முக்கியமான பொருளாக இடம்பெற வேண்டியது அவசியமானதாகும், தயிரில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை தூண்டி நல்ல செரிமான சக்தியை அளிக்கின்றன. மேலும் இதில் நிறைந்துள்ள நன்மைபயக்கும் பாக்டீரியவான லாக்டோபேசில்லஸ் பால்கேரிக்கஸ் வயிறு உப்புசம் போன்ற வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை சரிசெய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இதிலுள்ள புரோட்டீன் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.
மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்
உடல் எடை அதிகரிப்பதற்கு மரபு, கொழுப்பு போன்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணம் என்னவென்றால் சரியான செரிமானமின்மை தான் என்று கூறப்படுகிறது. நம் உடலில் தாங்கும் செரிக்கப்படாத உணவுகள் தான் நம்முடைய உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கிறது. ஆனால் தயிர் சாப்பிடுவது செரிமான மணடலத்தில் வினைபுரிந்து நன்கு செரிமானம் அடைய செய்கிறது. நொதித்தல் மூலம் உருவாக்கப்படும் தயிரில் அதிகளவு புரோட்டீன் உள்ளது, 1 அவுன்ஸ் தயிரில் கிட்டத்தட்ட 12கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது. புரோட்டீன் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது நம்முடைய வயிறு நீண்ட நேரத்திற்கு நிரம்பியது போன்ற உணர்வை தருகிறது.
அப்படி வயிறு நிறைவாக இருந்தால், நாம் அதிகமான உணவை சாப்பிடமாட்டோம் இதனால் நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் படிவதும், உடல் பருமன் அடைவதும் தடுக்கப்படுகிறது, மேலும் தொப்பையை குறைக்கிறது. இதில் புரோட்டீன் மட்டுமில்லாமல் கால்சியம் சத்து நிரம்பியுள்ளதால் நமது உடலிலுள்ள எலும்புகளின் வலிமைக்கும் தயிர் உதவுகிறது. மேலும் தயிரில் வைட்டமின்-பி12, வைட்டமின்-பி, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிரம்பி உடலுக்கு வலுசேர்க்கிறது. வெறும் தயிர் சாப்பிட பிடிக்காதவர்கள் அதனுடன் நட்ஸ், தேன் போன்ற எதையாவது சேர்த்தும், காய்கறிகள் கலந்தும் சாலட் போல சாப்பிடலாம்.
மேலும் படிக்க | Health Tips: பப்பாளி பழத்தை ‘இதனுடன்’ மறந்தும் சாப்பிடக் கூடாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR