மலச்சிக்கல் பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்

Constipation Cure: அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவது செரிமான செயல்முறை ஆரோக்கியமான முறையில் செயல்படவில்லை என்பதற்கான அறிகுறியாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 27, 2022, 06:44 PM IST
  • மலச்சிக்கல் ஏற்பட்டால் முதலில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • ஒரு டீஸ்பூன் திரிபலா சூர்ணத்தை வெதுவெதுப்பான நீரில் இரவு உணவிற்கு 1 மணி நேரம் கழித்து அல்லது படுக்கைக்கு முன் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • காலையில் வயிறு தெளிவாக இருக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும் title=

மலச்சிக்கலுக்கு வீட்டு வைத்தியம்: மலச்சிக்கல் என்பது இன்று மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றாகும். அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவது செரிமான செயல்முறை ஆரோக்கியமான முறையில் செயல்படவில்லை என்பதற்கான அறிகுறியாகும். மேலும், அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் குறிக்கிறது. ஏனெனில் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் உங்கள் உணவில் மறைந்துள்ளது.

மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது?

- மலச்சிக்கலுக்கான பல காரணங்களில், அன்றாட வாழ்க்கை மற்றும் உணவுமுறை தொடர்பான காரணங்களும் அடங்கும். 

- உங்கள் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் மலச்சிக்கல் ஏற்படும். நீங்கள் நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது குறைவாகவோ சாப்பிட்டாலோ மலச்சிக்கல் ஏற்படலாம். 

- பச்சைக் காய்கறிகளை சாப்பிடாதவர்களுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை வரும்.

- மைதாவால் தயாரிக்கப்படும் பொருட்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

மேலும் படிக்க | காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலியா; ‘இவை’ காரணமாக இருக்கலாம் 

- போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

- அதிக எண்ணெய் மற்றும் துரித உணவுகளை உண்பவர்களுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

- அதிக காஃபின் உட்கொள்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

- உடல் சுறுசுறுப்பு குறைவாக இருப்பவர்கள், ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பவர்கள் ஆகியவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைகளும் அதிகமாக ஏற்படும்.

மலச்சிக்கலை போக்க வீட்டு வைத்தியம்

மலச்சிக்கலை நீக்கும் வீட்டு வைத்தியம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் உணவில் மாற்றம், இரண்டாவது வயிற்றை சீக்கிரம் சுத்தம் செய்வதற்கான வழிமுறை. 

மலச்சிக்கலில் இருந்து விடுபட உணவில் என்ன மாற்ற வேண்டும்?

- மலச்சிக்கல் ஏற்பட்டால் முதலில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.

- காபி, டீ, குளிர் பானங்களை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். 

- சப்பாத்தி மற்றும் சாதத்தை விட சாலட் மற்றும் பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

- இரவு உணவில் வாயுவை அதிகரிக்கும் பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை செரிமானத்தின் அடிப்படையில் கனமாகவும் இருக்கும். 

- இரவு உணவிற்கு கிச்சடி சிறந்ததாக இருக்கும்.

- இரவு உணவு உண்ட உடனேயே உறங்கச் செல்லாமல், குறைந்தது 30 நிமிடங்களாவது மெதுவான வேகத்தில் நடக்க வேண்டும்.

வயிற்றை சுத்தம் செய்ய வீட்டு வைத்தியம்?

- வெந்தய விதைகளை உட்கொள்ளவும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, இந்த வெந்தயத்தை தண்ணீரில் இருந்து எடுத்து பின் சாப்பிட்டு, நீர் குடிக்கவும். வயிறு சுத்தமாக இருக்கும்.

- இரவு உறங்குவதற்கு முன் இரவு உணவுக்கு இரண்டு மணி நேரம் கழித்து ஒரு கிளாஸ் பால் குடிக்கவும். மலச்சிக்கலை போக்க பால் உதவுகிறது.

- ஒரு டீஸ்பூன் திரிபலா சூர்ணத்தை வெதுவெதுப்பான நீரில் இரவு உணவிற்கு 1 மணி நேரம் கழித்து அல்லது படுக்கைக்கு முன் எடுத்துக் கொள்ளுங்கள். காலையில் வயிறு தெளிவாக இருக்கும்.

- காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கருப்பு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Cholesterol பிரச்சனையா? இதை குடித்தால் ஒரே மாதத்தில் கொழுப்பு பனியாய் உருகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News