முட்டை அதிகமாக உண்ணும் நபரா நீங்கள்? ஜாக்கிரதை, இந்த பிரச்சனைகள் வரலாம்
Side Effects of Eggs: அளவுக்கு அதிகமான முட்டை நமது ஆரோகியத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்: ஆரோக்கியமாக இருக்க நாம் பல வகையான உணவு பொருட்களை உட்கொள்கிறோம். இவற்றில் முட்டை ஒரு முக்கியமான உணவாகும். முட்டையில் பல வகையான சத்துக்கள் காணப்படுகின்றன.
முட்டை நம் இதயம், கண்கள் என பல வித பாகங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது. அனைவரும் முட்டைகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பலர் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளை சாப்பிடுகிறார்கள். சிலர் இரண்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிடுகிறார்கள்.
முட்டை உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதுதான், ஆனால் அளவுக்கு அதிகமான முட்டை நமது ஆரோகியத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்:
முட்டையில் கொலஸ்ட்ரால் உள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு முட்டைகள் சாப்பிட்டால், அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் இதை விட அதிக முட்டைகளை உட்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முட்டையின் வெள்ளை பகுதியை மட்டும் சாப்பிட வேண்டும். இல்லையெனில், அதிக முட்டைகளை உட்கொள்வது உங்கள் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கும் இந்த பானத்தை தினமும் குடிக்கவும்
நீரிழிவு ஆபத்து:
முட்டைகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலில் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. முட்டையில் கொலஸ்ட்ரால் உள்ளது என்று நாம் முன்பே சொன்னது போல், நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, நம் உடலில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கத் தொடங்குகிறது. சர்க்கரை கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஒரு நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்.
எடை அதிகரிப்பு:
முட்டையில் கொழுப்பு உள்ளது. நீங்கள் அதிக முட்டைகளை உட்கொள்ளும்போது, உங்கள் உடலால் உட்கொள்ளும் கலோரிகளை சமநிலைப்படுத்த முடியாது. இதன் காரணமாக உங்கள் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. நீங்கள் அதிக முட்டைகளை உட்கொள்ளும்போது, அது உங்கள் உடல் எடை-யை நேரடியாக பாதிக்கிறது.
வயிறு தொடர்பான பிரச்சனை:
முட்டையில் புரதம் உள்ளது. புரதத்தின் விளைவால் உடலில் உஷ்னமும் அதிகரிக்கும். முட்டை உங்கள் உடலில் செரிக்கப்படுவதால், அது வெப்பத்தை அதிகரிக்கிறது. அதிக முட்டைகளை உட்கொள்வதன் மூலம், வயிறு தொடர்பான பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக, வாந்தி, வயிற்று வலி, பிடிப்புகள் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | முகத்தில் உள்ள முடிகளை நிரந்தரமாக நீக்கும் இயற்கையான வழி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR