முட்டை சாப்பிட்டால் நீரிழிவு வருமா?- மருத்துவர் விளக்கம்

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நீரிழிவு நோயைத் தூண்டும் என்றும், முட்டை சாப்பிட்டால் நீரிழிவு வரும் என்றும் சீன ஆய்வு முடிவைச் சுட்டிக்காட்டுவது இப்போது பேசுபொருளாகியுள்ளது. இதில் உண்மையில்லை என்று பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 29, 2022, 03:22 PM IST
  • நீரிழிவைக் குறைக்க மாவுச்சத்து நிரம்பிய தானிய உணவுகளைக் கட்டுப்படுத்துவது பலன் தரும்
  • குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்
  • மது, புகையைத் தவிர்க்க வேண்டும்
முட்டை சாப்பிட்டால் நீரிழிவு வருமா?- மருத்துவர் விளக்கம்  title=

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நீரிழிவு நோயைத் தூண்டும் என்றும், முட்டை சாப்பிட்டால் நீரிழிவு வரும் என்றும் சீன ஆய்வு முடிவைச் சுட்டிக்காட்டுவது இப்போது பேசுபொருளாகியுள்ளது. இதில் உண்மையில்லை என்று பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். 

சீன மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கத்தார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. 1991 முதல் 2009 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து குறிப்பிட்ட தொற்றுநோயியல் நிபுணரும், பொது சுகாதார நிபுணருமான மிங் லி, டைப் 2 நீரிழிவு இருப்பவர்களுக்கு உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், எந்த உணவுக் காரணிகள் இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில் இது தொடர்பாக பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா விளக்கம் அளித்தார்.

''தினமும் ஒரு முட்டை (50 கிராம்) சாப்பிட்டால் 60% நீரிழிவு வரும் வாய்ப்பு உண்டு என்று ஒரு ஆய்வு முடிவை சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளார்கள். அந்த ஆய்வின் ஆழத்துக்கு எல்லாம் சென்று தூர்வாரத் தேவையில்லை. மேலோட்டமாகப் பார்த்தாலே போதும். அதில் உண்மை இருக்காது என்பது நமக்குப் புலனாகிவிடும். ஆனால் மருத்துவ அறிவு மற்றும் சிந்தனை இல்லாத காமன் மேனுக்கு இவ்வகை ஆய்வுச்செய்திகள் மற்றும் அதை ஒட்டி வரும் தலைப்புச் செய்திகள் ஒருவித அச்சத்தை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

காக்கா உட்கார பனம்பழம்  விழுந்த கதை என்பார்கள் அல்லவா. அதுபோலத்தான். ஒரு விசயம் நடந்து முடிந்த பிறகு அதற்கு காரணமாக சம்பந்தமில்லாத இன்னொரு விசயத்தை முடிச்சு போடுவது...
1990இல் இருந்து 2010 வரை 8000+ நபர்களிடம் அவ்வப்போது கேள்வி கேட்கப்படும்.

நீங்க கடந்த மூன்று நாட்கள்ல எத்தனை முட்டை எடுத்தீங்க? சிலர் தினமும் ஒன்று, சிலர் மூன்று நாட்கள்ல முட்டை எடுக்கல என்று பதில் கூறுவர். இவர்களிடம் இவ்வாறாக இருபது வருடம் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்து கடைசியில் 2010 ஆம்  ஆண்டு வரை கணக்கிட்டு 1990இல் இவர்கள் சாப்பிட்ட முட்டை அளவு நாளொன்றுக்கு 15 கிராம் 2010இல் அதை 30 கிராமாக கூட்டியிருக்கிறார்கள். இவ்வாறு கூட்டி சாப்பிட்டவர்களிடம் அப்படி சாப்பிடாதவர்களை விட  60% நீரிழிவு அதிகம் காணப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு கடைசியாக இது குறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்து இவ்வாறாக நீரிழிவு கூறியதற்கு முட்டை தான் முழுமுதற்காரணம் என்பதை எதிர்காலத்தில் உறுதி செய்ய வேண்டும் என்று அஃகன்னா வைத்துள்ளனர்.  

மேலும் படிக்க | பகீர் தகவல்! அளவிற்கு அதிகமான முட்டை நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறதா..!!

முட்டையைத் தனியாகச் சாப்பிட்டவர்கள் யாருக்கும் நீரிழிவு அதிகரிக்காது.
ஆனால் 
முட்டையோடு பீட்சா பர்கர் 
முட்டையை இனிப்பு கலந்த கேக்காக சாப்பிடுவது 
முட்டை போண்டா 
முட்டை பரோட்டா 
முட்டை பிரியாணி 
முட்டை ஆம்லெட் கூடவே சரக்கு தம்  என்று சேர்த்து அடிப்பது 
முட்டை பஜ்ஜியோடு குளிர்பானங்கள் குடிப்பது
இப்படி முட்டையோடு சேர்த்து பல விசயங்களையும் சாப்பிட்டு கடைசியில் முட்டை மீது பழி போடுவது நடக்கிறது.

குறை மாவு வாழ்வியலில் இருக்கும் பலரும்  தினமும் மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை ஒரு வேளை உணவாக எடுத்து வருகின்றனர். நீரிழிவு கட்டுப்பாடுடன் இருப்பதைத் தொடர்ந்து காண முடிகின்றது 

இதய நோய் உருவாக்கத்திற்கு ரத்த கொலஸ்ட்ரால் அளவுகள் மீது இவ்வாறு ஆராய்ச்சி செய்துதான் அவதூறு சுமத்தப்பட்டது.  இன்று வரை கொலஸ்ட்ரால்தான் இதயநோய்க்குக் காரணம் என்றோ கொலஸ்ட்ராலைக் குறைத்தால் இதய நோய் வராது என்றோ ஆணித்தரமாக மெய்ப்பிக்கும் ஆய்வுகள் இல்லை. ஏழை எளியோரால் கூட எளிதில் வாங்கி உண்ண முடிந்த புரதச்சத்து நிரம்பிய முட்டை மீதும் இதே களங்கம் சுமத்தப்படுகிறது 

நீரிழிவைக் குறைக்க மாவுச்சத்து நிரம்பிய தானிய உணவுகளைக் கட்டுப்படுத்துவது, குளிர்பானங்களைத் தவிர்ப்பது, மது, புகை தவிர்ப்பது போன்றவை பலன் தரும். முட்டை ஒருபோதும் நீரிழிவை உருவாக்காது. அது நீரிழிவு நோயர்க்குப் பாதுகாப்பான உணவாகும்''.

இவ்வாறு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். 

மேலும் படிக்க |  முட்டை பிரியர்களுக்கு ஷாக்: அளவு அதிகமானால் அவதிப்பட நேரிடலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

 

 

Trending News