Simple Exercises For Thigh Fat Reduction : உடல் எடை அதிகமாக இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு, தொடை சதை அதிகமாக இருப்பதை பார்த்திருப்போம். அப்படி, அதிகமான உடல் எடை இல்லாதவர்களுக்கு கூட, தொடை தசை அதிகமாக இருப்பதையும் பார்த்திருப்போம். தொடை பெரிதாக இருப்பது, பெரும்பாலான பெண்களுக்கு அவர்கள் உடல் குறித்த பயமாக (Insecurity) இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை குறைப்பதற்கு டயட் இருப்பது மட்டுமன்றி சில உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டியதிருக்கும். தொடையிலிருக்கும் தசைகளை stubborn fat என்று கூறுவர். இதற்கு, எளிதில் குறையாத கொழுப்பு என்று அர்த்தம். அதனால், இந்த தசைகளை குறைக்க கால் சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளை அதிகம் செய்ய வேண்டியதாய் இருக்கும். உடல் எடையை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களும் கூட, இந்த உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்ளாம். அவை என்னென்ன உடற்பயிற்சிகள் தெரியுமா?


பர்பீஸ்:


Burpees உடற்பயிற்சியை, ஒட்டுமொத்த உடலையும் கொண்டு செய்ய வேண்டும். இது, உடற்கொழுப்பை குறைக்க உதவும் ஒரு உடற்பயிற்சியாகும். இந்த உடற்பயிற்சியை செய்வதால் கண்டிப்பாக கைமேல் பலன் கிடைக்கும் என்கின்றனர், செய்தவர்களும் பலனை அனுபவித்தவர்களும்.


எப்படி செய்வது?


உங்கள் கால்களை நேராக வைத்து தரையில் நிற்க வேண்டும். பின்னர் உங்கள் கைகளை நேராக தரையி வைத்து, பின்பு கால்களை தரையில் குதிக்கும் வகையில் நீட்டி, மீண்டும் கையருகே மடக்கி கொண்டுவர வேண்டும். எழுந்து கொள்ளும் போது, குதித்துக்கொண்டே எழுந்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால், கண்டிப்பாக தொடை சதை குறையும். ஆனால் இதை செய்கையில் வேகமாக செய்ய வேண்டுமா, இல்லை மெதுவாக செய்ய வேண்டுமா என்பது உங்கள் முடிவு. 


ஓட்டப்பயிற்சி:


தினமும் காலையில் 10 நிமிடம் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால், இருதய நோய் பாதிப்பு கூட ஏற்படாமல் தப்பிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஓட்டப்பயிற்சி, உங்கள் ஒட்டுமொத்த உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைக்க உதவுகிறது. 


மேலும் படிக்க | உடம்புக்கு ரொம்ப முடியலையா... இந்த 6 ஜூஸ் குடித்தால் ஜம்முனு இருக்கும்!


எவ்வளவு நேரம் ஓட வேண்டும்? 


உங்கள் தொடை சதையை குறைக்க நினைத்தால், 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஓட்டப்பயிற்சி செய்யலாமாம். இப்போதுதான் ஓட்டப்பயிற்சி ஆரம்பித்திருக்கிறீர்கள் என்றால், இவ்வளவு நேரம் இருக்க தேவையில்லை. முதலில் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாம், அதன் பிறகு ஓட்டப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம். 


லஞ்சஸ்:


Lunges உடற்பயிற்சி, கணுக்கால், இடுப்பு சதை, தொப்பை, தொடை சதை உள்ளிட்ட அனைத்து தசைகளையும் குறைக்க உதவி புரியும். 


இதை எப்படி செய்ய வேண்டும்?


உங்களது மேல் உடலை நேராக வைத்து, உங்களது இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு முட்டியை மடக்கி இன்னொரு முட்டியை முன்நோக்கி நிறுத்த வேண்டும். இப்படியே செய்தால் தொடை சதை குறையும். 


ரிவர்ஸ் ப்ளாங்க்:


இது, சாதாரண Plank உடற்பயிற்சி போலத்தான், ஆனால் உள்டாவாக செய்ய வேண்டியது. இந்த உடற்பயிற்சியினால் தொடை சதை வேகமாக குறையுமாம். 


இதை எப்படி செய்வது?


இரு கைகளை தரையில் வைத்துக்கொண்டு, உங்கள் கால்களை முன் நோக்கி நீட்ட வேண்டும். உங்கள் உடல் நேராக இருக்க வேண்டும். பின்பு உங்கள் இடுப்பின் வலுவால் உடலை உயர்த்தி, தரையில் தாழ்த்த வேண்டும். 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மூளை ஜெட் வேகத்தில் வேலை செய்ய... நினைவாற்றலை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ