பொதுவாக ஒருவருக்கு நல்ல தூக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் தனது வேலைகளை சரியாக செய்ய முடியும். உறக்கம் சரியாக இல்லையென்றால் சோர்வு ஏற்பட்டு, அடுத்தநாள் வேலைகளை சரியாக பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆகவே ஓரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நல்ல ஆழ்ந்த  தூக்கம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியம். இப்போதெல்லாம் பலரும் சொல்லும் ஒரு விஷயமாக தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறது. உணவுக்கும் தூக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?  இரவு உணவில் சரியான உணவை சேர்த்துக் கொண்டால்,  நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், உணவுமுறை மட்டுமல்லாது, உண்ணும் நேரமும் முக்கிய பங்கு வகிக்கும்.  இரவில் தாமதமாக உணவை சாப்பிட்டால், உங்கள் செரிமானத்தை பாதிக்கும். நீங்கள் இரவில் தூங்க செல்லும் நேரத்திற்கும், உணவருந்தும் நேரத்திற்கும் இடைவெளியானது குறைந்து 2 முதல் 3 மணி நேரமாவது இருக்க வேண்டும். இந்த விஷயத்தை உங்களால் பின்பற்ற முடியவில்லை என்றாலும் குறைந்தது 1 மணி நேரமாவது இடைவெளி இருக்கலாம். எனவே தூங்கும் முன் எந்த வகை உணவை எடுத்துக் கொண்டால், நல்ல தூக்கம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


ஒரு கப் சூடான பால் 


முதலில், தூங்கும் முன் ஒரு கப் சூடான பால் குடிப்பதை பழக்கமாக கொள்வது சிறந்த பலனைக் கொடுக்கும். பாலில் அதிக அளவு கால்சியம், வைட்டமின்-டி மற்றும் மெலடோனின் இருப்பதால்,  நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது. நல்ல தூக்கத்திற்கு சிறந்த பானமாகும். பாலில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது செரோடோனினாக மாறும். செரோடோனின் மூளைக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும். இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கிறது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய், ஒரு சிட்டிகை ஏலக்காய் மற்றும் சில பாதாம் பருப்புகள் பாலின் சுவையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நல்ல, ஆழ்ந்த தூக்கத்தை பெறவும் உதவும்.


தூக்கமின்மையை விரட்டும் பாதாம்


பாதாமில் ட்ரிப்டோபன் உள்ளது, இது மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தும். மூளையின் சக்தியை அதிகரிப்பதுடன், பாதாம் உங்களுக்கு நல்ல, ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும். அதே நேரத்தில், இதில் உள்ள மெக்னீசியம் உங்கள் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒரு கைப்பிடி பாதாம் எடுத்துக் கொள்வது நல்ல தூக்கத்தை கொடுக்கும்.


முந்திரியும் நன்மை பயக்கும்


இது தவிர தூங்கும் முன் முந்திரி சாப்பிடலாம். முந்திரி நரம்புகளை தளர்த்த உதவுகிறது. முந்திரியில் கொலஸ்ட்ரால் அதிகம் இல்லை. எனவே சர்க்கரை நோயாளிகள் இரவு உணவில் முந்திரியையும் சேர்த்துக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | மருந்தே தேவையில்லை... யூரிக் அமில பிரச்சனைக்கு சில எளிய தீர்வுகள்!


நல்ல தூக்கம் கொடுக்கும் ஜாதிக்காய்


ஜாதிக்காயை இரவில் சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடலாம். இது நரம்புகளை அமைதிப்படுத்தவும் செரோடோனின் வெளியிடவும் உதவுகிறது. இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.


சப்பாத்தி அல்லது சாதம் 


ரொட்டி- அரிசி உணவுகள் எடையை அதிகரிக்கும் என்பதால் இரவில் சாப்பிடக்கூடாது என்று பலர் கூறுகிறார்கள், ஆனால் அப்படி எதுவும் இல்லை. இது உடலில் டிரிப்டோபனை வெளியிட உதவுகிறது மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்க உதவுகிறது.


டார்க் சாக்லேட்


டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை கொடுக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதில் செரோடோனின் உள்ளது. இது உங்கள் மனம் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி நன்றாக தூக்கத்தை கொடுக்கும்.


சர்க்கரைவள்ளிக் கிழங்கு 


இரவு உணவில்  சர்க்கரை வள்ளிக்கிழங்குகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், நரம்புகளை அமைதிப்படுத்தவும், நல்ல தூக்கத்திற்கும் பயன்படுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தால் கத்திரிக்காய் வேண்டாமே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ