சர்க்கரை நோய் பிரச்னை இருந்தால், வாழ்நாள் முழுவதும் மருந்துகளின் உதவியோடனே வாழக்கையை ஓட்ட வேண்டும். மறுபுறம் நீரிழிவு நோய்க்கு பல சிகிச்சைகள் உள்ளன, ஆனால் இந்த மருந்துகளால் முழுமையாக சர்க்கரை நோயை குணப்படுத்துவது என்பது கடினமாகும். நீரிழிவு நோய்க்கு இயற்கையான சிகிச்சை அளிக்கப்பட்டால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உலர் பழங்களைச் சாப்பிடலாம். நீரிழிவு நோய்க்கு வால்நட் மிகவும் நன்மை பயக்கும். குளிர்காலத்தில் வால்நட் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். மேலும் ஊறவைத்த வால்நட்ஸை சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு அபாயத்தையும் நீக்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வால்நட்ஸில் உள்ள சத்துக்கள் 
புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, கார்போஹைட்ரேட், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் அக்ரூட் பருப்பில் காணப்படுகின்றன. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதோடு, வால்நட் பருப்புகள் பல நோய்களின் அபாயத்தையும் நீக்குகின்றன.


மேலும் படிக்க | நீரிழிவு நோயை விரட்ட ‘இந்த’ பழத்தின் விதைகளே போதும்! பயன்படுத்தும் முறை! 


வால்நட் சர்க்கரை நோய்க்கு எதிரானது
வால்நட் பருப்பில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உண்மையில், வால்நட் பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாக, உடலில் உள்ள செல்கள், இன்சுலின் ஹார்மோனை சிறப்பாகப் பயன்படுத்தத் தொடங்குகின்றன, இதன் காரணமாக நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும்.



குளுக்கோஸை கட்டுப்படுத்த உதவுகிறது
வால்நட்ஸில் நார்ச்சத்து நல்ல அளவில் காணப்படுகிறது. நீங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உங்கள் தினசரி உணவில் ஊறவைத்த வால்நட்ஸை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவாகவே இருக்கும். 


கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்
கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் வால்நட் பருப்புகள் பயனுள்ளதாக இருக்கும். ஊறவைத்த வால்நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். இது மாரடைப்பு போன்ற நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் வீட்டில் உள்ள 4 பொருட்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ