ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த சில உணவுகள்
உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது ரத்த ஓட்டம். இருதய நோய் என்றால் என்ன என்பது பற்றி நமக்கு துல்லியமாக தெரிந்திருக்காது. அதனை கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்பார்கள். சுவாசத்திற்கும், இருதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றாலும் இருதயத்துக்குப் பிரச்னை ஏற்படுகிறது. இருதய நோய்களைப் பொருத்தவரை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளும் இருப்பதில்லை. நோய் அதிகமாகும்போது கால்களில் வலி, மரத்துப் போதல், கால் வீக்கம், கைகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும்.
இருதய நோயிலிருந்து எப்படி பாதுகாப்பது- பார்போம்
எலுமிச்சை
இந்த பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் இவை உடலில் ஏற்படும் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த உதவுகிறது.
பூண்டு
பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின், ரத்த கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம்.
வாழைப்பழம்
அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கி, இரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கீரை
வாரத்தில் இரண்டு நாட்களாவது கீரையை சாப்பிட்டு வர ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.
பீன்ஸ்
பீன்சில் அதிக அளவு நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே பீன்ஸ் தினமும் சாபிட்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த உதவும்.