வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் இன்று அதிகமாக மக்களை பாதித்து வருகிறது. உணவு முறை மாற்றத்தினால் ஏற்பட்ட இந்தப் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள் இருந்தாலும், இயற்கையான வழியில் அதற்கு தீர்வு காண்பது ஒன்றே நன்மை தரும். வயிறு உப்புசம், வாயு தொல்லை போன்றவை சாதாரண பிரச்சினையாக தோன்றினாலும், இது நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையை பாதிக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த பிரச்சனைக்கான காரணம் என்ன, இந்த சிக்கலை எவ்வாறு அகற்றுவது என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ள இருக்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயிற்றில் வாயு உருவாவதற்கான காரணம் என்ன


* இந்தியாவில், பெரும்பாலோனோர் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர், இதை நாம் பொதுவாக 'பெட் டீ' என்று அழைக்கிறோம். எதுவும் சாப்பிடாமல் டீ குடிப்பதால் வயிற்றில் வாயு பிரச்சனை ஏற்படும் அதுமட்டுமின்றி அமிலத்தன்மையையும் இது ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | பெண்களின் அந்தரங்க உறுப்பை பராமரிக்கும் ஆப்பிள் சிடர் வினிகர்


* பிஸியான வாழ்க்கை முறை அல்லது நேரமின்மை காரணமாக, நாம் அடிக்கடி உணவை மிக விரைவாக சாப்பிட முயற்சிக்கிறோம், அதன் காரணமாக செரிமான பிரச்சனை தொடங்குகிறது, இது பின்னர் வாயு பிரச்சனையாக மாறும்.


* நீங்கள் லாக்டோஸ் கொண்ட பால் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை அதிகமாக எடுத்துக்கொண்டால், அவை வாயு தொல்லைக்கு காரணமாகலாம். எனவே அத்தகைய பொருட்களை அளவாகவே எடுக்கொள்ள முயற்சி செயுங்கள். அத்துடன் கட்டயம் உங்களின் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.


* வாயை அதிகமாக திறந்து உணவை உட்கொண்டால் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த பழக்கத்தை இன்றே தவிர்க்க முயர்ச்சிக்கவும். 


* உணவை சரியாக ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் வாயு பிரச்சனையை உருவாக்கும். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் மருவத்துவரை கட்டயம் அணுகவும்.


வயிற்றில் ஏற்படும் வாயுவை எப்படி சரிசெய்வது
1. பெருஞ்சீரகம் தண்ணீர் குடிப்பதால், வயிற்றில் ஏற்படும் உப்புசம் நீங்கும். இதற்கு பெருஞ்சீரகத் தண்ணீரை இரவில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி அதன் நீரை அருந்த வேண்டும்.
2. அதிக எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும், இது தவிர, ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் நொறுக்குத் தீனிகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.
3. புதினா நீரை குடித்து அதன் இலைகளை மென்று சாப்பிடுவது கோடை காலத்தில் மிகுந்த நிவாரணம் அளிக்கும்.
4. ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதனுடன் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கவும்.
5. நடைபயிற்சி மேற்கொண்டால் வயிற்றில் இருந்து வாயு வெளியேறி, நிவாரணம் அளிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | அமிர்தவல்லி கல்லீரலை சேதப்படுத்துமா? ஆயுஷ் அமைச்சகத்தின் விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR