பழங்கள் மட்டுமல்ல, பழத்தின் தோலும் உடலில் மறைந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும், உணவாக உண்டால், உடலின் உள் உறுப்புகளுக்கு நல்லதைச் செய்யும் பழங்களில், எல்லாப் பழங்களின் தோல்களும் பயன்பாட்டிற்கு உரியது அல்ல. சுலபமாக மலிவான விலையில் கிடைத்தாலும், பல பழங்களில் ஊட்டச்சத்து மிகவும் அதிகமாக அடங்கியுள்ளது. அந்த சூப்பர்ஃப்ரூட் பழங்களில் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் உள்ள பழங்களில் ஒன்று பப்பாளி. இதன் தோலை பழத்துடன் சேர்த்து சாப்பிட்டால், இரட்டிப்பு பலன் கிடைக்கும். பப்பாளிப்பழத் தோலின் கொழுப்பைப் போக்கும் மகிமைகள் பலருக்கு தெரியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் பழத்தோல்: அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க, மருந்துகள் மட்டுமின்றி, சில உள்நாட்டு மற்றும் இயற்கை முறைகளையும் பின்பற்றலாம், அவற்றில் பப்பாளியும் முக்கியமான ஒன்று.
 
அதிக கொலஸ்ட்ரால் என்ற பிரச்சனை இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துவிட்டது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், கொழுப்பைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். அதிக கொழுப்பு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும், இது சில சமயங்களில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது, நிலைமை மோசமடைந்த பிறகே, தெரிய வருவதால், மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது.


எனவே, அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், மருந்துகளை உட்கொள்வதோடு, கொழுப்பின் அளவைக் குறைக்க மற்ற மருந்துகளையும் பின்பற்ற வேண்டும். 


மேலும் படிக்க | இந்த மூலிகைகளை சமைச்சு சாப்பிட்டா வேற லெவல்! அப்படியே சாப்பிட்டா ஆரோக்கியம் உறுதி


பெரும்பாலான வீட்டு வைத்தியங்கள் பாதுகாப்பானவை, அப்படிப்பட்ட பாதுகாப்பான வைத்தியங்களில் ஒன்றைப் பற்றி இன்று தெரிந்துக் கொள்வோம். இந்தப் பழத்தின் தோலை சாப்பிட்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதை தடுக்கலாம்.


பழத்தின் தோலுக்கு பல சிறப்பு பண்புகள் உள்ளன
உடலில் தேவைக்கு அதிகமாக படிந்திருக்கும் கொழுப்பைக் கட்டுப்படுத்த மருந்துகள் மட்டுமல்ல, பப்பாளித் தோலை உட்கொள்வதும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு போன்ற சிறப்பு கூறுகள் பப்பாளி தோலில் காணப்படுகின்றன, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து பப்பாளி தோலில் ஏராளமாக காணப்படுகின்றன, இதனை உட்கொள்வதால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதை தடுக்கலாம்.


இரட்டிப்புப் பலன்
பப்பாளிப் பழம் மட்டுமல்ல, இந்தப் பழத்தின் தோலும் அதிக கொழுப்பைக் கையாள்வதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை அதன் தோலுடன் சேர்த்து சாப்பிடலாம். சிலருக்கு பப்பாளி தோலின் சுவை பிடிக்காது, இதனால் அவர்களால் அதை சாப்பிட முடியாது. ஆனால் உண்மையில், பப்பாளியுடன் சேர்த்து உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


எப்பொது உண்ணலாம்? 
அதிக கொழுப்பைக் குறைக்க, பப்பாளி தோல் அல்லது பழத்தை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம், ஆனால் காலையில் அதை உட்கொள்வது அதிக நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பப்பாளியை அதன் தோலுடன் சேர்த்து சாப்பிடவும். காலையில் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், மதியம் அல்லது மாலையில் சாப்பிடலாம்.


மேலும் படிக்க | வரப்பிரசாதமாகும் இஞ்சியே ஆரோக்கியத்திற்கு சாபம்! ஆச்சரியம் ஆனால் இது உண்மை!


பப்பாளிப் பழத்தின் இனிப்பான சதை, அதன் அற்புதமான சுவை மற்றும் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களுக்காக ஊட்டச்சத்து மிகுந்த பழம் ஆகும். பப்பாளியின் தோல் மட்டுமல்ல, ஆதன் விதைகளுக்கும் சில தனித்துவமான நன்மைகள் உண்டு. குறிப்பாக கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதில், பப்பாளின் தோலைப் போலவே அதன் விதைகளும் அற்புதமாய் பலனளிக்கின்றன. 


கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் பப்பாளி விதைகள்


பப்பாளி விதைகளில் உள்ள பப்பைன் என்ற நொதி, உணவு புரதங்கள் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவுகிறது. இந்த நொதி நடவடிக்கை ஒட்டுமொத்த கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இது, இதயத்தின் தமனிகளை அடைத்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.



நார்ச்சத்து


பொதுவாகவே நார்ச்சத்து கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். பப்பாளி விதைகள் உணவு நார்ச்சத்தின் அற்புதமான ஆதாரமாக உள்ளது, இது குடலில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உண்ண வேண்டும்.


ஆன்டிஆக்ஸிடன்ட்கள் 


அதே போல, பப்பாளியின் தோலிலும்,  விதைகளிலும் ஃபீனாலிக் மற்றும் ஃபிளாவனாய்டு சேர்மங்கள் என ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன, இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம், இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.


மேலும் படிக்க | அற்புத பலன் தரும் குளிர்காலக் கீரை! கடுகுக்கீரை கூட்டு சாப்பிட்டால் நோய்கள் ஓடிப்போகும்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ