வரப்பிரசாதமாகும் இஞ்சியே ஆரோக்கியத்திற்கு சாபம்! ஆச்சரியம் ஆனால் இது உண்மை!

Ginger For Health: குளிர்காலத்தில் இஞ்சி சளி தொடர்பான பல நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது, அதன் பல நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 1, 2024, 03:28 PM IST
  • சளி தொடர்பான பல நோய்களுக்கு மருந்தாகும் இஞ்சி
  • சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் இஞ்சி
  • காய்ந்தாலும் காய்ச்சலைப் போக்கும் சுக்கு
வரப்பிரசாதமாகும் இஞ்சியே ஆரோக்கியத்திற்கு சாபம்! ஆச்சரியம் ஆனால் இது உண்மை! title=

குளிர் காலத்தில், ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகள் நல்ல ஆரோக்கியமானவர்களுக்கே வரும் என்ற நிலையில், வயதானவர்கள், நோயெதெரிப்பு சக்தி இல்லாதவர்களுக்கு சிரமம் அதிகரிக்கும். எனவே, குளிர்காலத்தில் ஆரோக்கியத்தின் மீது கவனம் அதிகரிப்பது அவசியம் ஆகிறது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, குளிர்காலத்தில் சில பொருட்களை உட்கொள்ள வேண்டும், அதில் ஒன்று இஞ்சி.

குளிர்காலத்தில் உணவின் முக்கியத்துவம்

குளிர்காலத்தில், உணவுடன் பல பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் உண்பது ஆரோக்கியம் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி பெரும்பாலும் பலவீனமாகிறது, இதன் காரணமாக பலர் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். குளிர்காலத்தில் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்என்றும் அதுவே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். உணவுப் பழக்கம் சரியில்லை என்றால் செரிமானக் கோளாறுகள், சளி, குளிர் காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு குளிர்காலத்தில் அதிகரிக்கிறது.

குளிர்காலத்தில் இஞ்சியின் நன்மைகள்

குளிர் காலத்தில் இஞ்சி (Benefits of Ginger) மிகவும் பிரபலமானது, இது தேநீரில் மட்டுமல்ல, உணவிலும் பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியத்தில் பல நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. குளிர்ந்த காலநிலையில் இஞ்சி ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நல்லது செய்யும் என்று தெரிந்துக் கொண்டால், தினசரி பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்வீர்கள்.

மேலும் படிக்க | சிறுநீரகத்தை பாதுகாக்க இந்த டயட் உதவும்! தினசரி உணவில் தவிர்க்கக்கூடாதவை

இஞ்சியில் ஆண்டி-ஆக்ஸிடெண்ட்
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது எனபதால், குளிர்காலத்தில் இதை உட்கொள்வது பல நோய்களைத் தடுக்கிறது.

குளிர்காலத்தில் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கத் தொடங்கும் என்பதால், இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது இந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், பல வகையான நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

ரத்த சர்க்கரையை சீராக்கும் இஞ்சி 

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தஇஞ்சியை உட்கொள்ளலாம். ஆனால், அது ஒரு அளவுடன் இருக்க வேண்டும். நாளொன்றுக்கு 4 கிராம் இஞ்சி சாப்பிட்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

ஆனால், வரப்பிரசாதமாகும் இஞ்சியே ஆரோக்கியத்திற்கு சாபமாக மாறும். அது எப்படி தெரியுமா? இஞ்சியை அதிகமாக உட்கொண்டால், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு அல்லது வேறு வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் சூட்டையும் அதிகரிக்கும்.

மூட்டுவலி நிவாரணி

கடும் குளிரால், வயதானவர்களுக்கு மூட்டுவலி, தசைவலி பிரச்னை அதிகமாகிறது. இத்தகைய சூழ்நிலையில், இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது, மேலும் இஞ்சி குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கும் என்பதால் இஞ்சியை பல்வேறு விதங்களில் பயன்படுத்தலாம். 

ஆயுர்வேதத்திலும் இஞ்சியின் நன்மைகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயத்தை வழக்கமாக உட்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி ஆண்டு முழுவதும் நன்றாக இருக்கும் என்பதும் பல வகையான நோய்களை எதிர்த்துப் போராட உதவும் என்பதும் சுகாதார நிபுணர்களின் கணிப்பு ஆகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Immunity: குளிர்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஹாய் சொல்லும் சூப்பர்ஃபுட் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News