ஹை கொலஸ்ட்ரால் ஒரு விஷயமே இல்ல.... இப்படி பண்ணா ஈசியா குறைக்கலாம்

Cholesterol Control Tips: கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும், தினமும் யோகா அல்லது உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 9, 2023, 02:02 PM IST
  • நல்ல உணவுப் பழக்கம் முக்கியம்.
  • எடையை குறைக்க வேண்டும்.
  • புகைபிடிப்பதை விட்டுவிடுவதும் முக்கியம்.
ஹை கொலஸ்ட்ரால் ஒரு விஷயமே இல்ல.... இப்படி பண்ணா ஈசியா குறைக்கலாம் title=

Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் மிகவும் பொதுவானவையாக இருப்பதால், கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை ஆரம்பத்திலேயெ கண்டறிவது மிகவும் கடினமாகி விடுகிறது. இருப்பினும், அதன் அதிகரிப்பு நமது இதயத்திற்கும் மற்ற உடல் பாகங்களுக்கும் தீங்கு விளைவிக்கும். கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. உடல் பருமன், சருமம் கருமையாக மாறுதல், அதிக வியர்வை, நெஞ்சு வலி, கால் வலி போன்றவை கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகளாகும்.

கொலஸ்ட்ராலைக் குறைப்பது நமது வாழ்க்கை முறையைப் பொறுத்தது. நமது வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்வதால் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை மேம்படுத்தலாம். அன்றாட வாழ்க்கையில் செய்யும் சிறிய மாற்றங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய 5 முக்கிய வாழ்வியல் மாற்றங்களைப் பற்றி இங்கே காணலாம்.

உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது முக்கியம் (Exercise)

கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும், தினமும் யோகா அல்லது உடற்பயிற்சியை (Exercise) செய்ய வேண்டும். தினமும் இல்லையென்றாலும், வாரத்தில் குறைந்தது 3 முதல் 4 நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அதிக கொழுப்பு இருந்தால், (High Cholesterol) ​​உங்கள் உணவுடன் உங்கள் உடல் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நல்ல உணவுப் பழக்கம் முக்கியம் (Healthy Food)

உணவுப்பழக்கத்தை மாற்றினால் கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம். மேலும் இதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இதற்கு அதிக கொழுப்புள்ள பொருட்களை உட்கொள்ளக்கூடாது. சிவப்பு இறைச்சி, முழு கிரீம் பால் பொருட்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம். இது தவிர, அதிகப்படியான எண்ணெய் மற்றும் மசாலா உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டாம். பேக்ட் உணவு போன்ற டிரான்ஸ் ஃபேட் பொருட்களையும் உட்கொள்ள வேண்டாம்.

மேலும் படிக்க | கூலா உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மருதாணி! மருதாணியில் இவ்வளவு விஷயம் இருக்கா?

சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளிவிதை போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். இது தவிர, கிண்டீ பீன்ஸ், பேரிக்காய், பிரஸ்ஸல்ஸ் முளைகள், ஓட்ஸ் மற்றும் ஆப்பிள் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துகளையும் உட்கொள்ளலாம்.

எடையை குறைக்க வேண்டும் (Weight Loss)

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பது சகஜம். இருப்பினும், இது ஆரோக்கியக் கண்ணோட்டத்தில் மிகவும் ஆபத்தானது. உடல் பருமனுடன் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். இது மாரடைப்புக்கு கூட காரணமாக இருக்கலாம். எனவே, முதலில் உங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இது அதிகரிக்கும் கொழுப்பைக் குறைக்கும்.

புகைபிடிப்பதை விட்டுவிடுவதும் முக்கியம் (No Smoking)

எச்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க புகைப்பிடிப்பதை நிறுத்துவதும் மிகவும் முக்கியம். புகைபிடிப்பது நுரையீரலுக்கு மட்டுமல்ல, இதய ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அதனால் இரத்த அழுத்தமும் கணிசமாக அதிகரிக்கும். புகைபிடிப்பதை நிறுத்திய 3 மாதங்களுக்குள் உங்கள் உடல் நிலையில் மாற்றங்களைக் காண முடியும்.

மது அருந்துவது நல்லதல்ல (Drinking Alcohol) 

மது அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனை உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கிறது. மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்துவது உங்களுக்கு கடினமாக இருந்தால், அதைக் குறைக்க முயற்சிக்கவும். அதிக அளவு மது அருந்துவதால் இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும்.

மேலும் படிக்க | தொப்பை காணாமல் போக, உடல் பருமனை ஓட ஓட விரட்ட.. இந்த மசாலாக்கள் உதவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News