நோய் எதிர்ப்பு சக்தியை அதிரடியாக அதிகரிக்கும் அன்னாசிப்பழம், சுவையானது, பல நோய்களைப் போக்குகிறது. மிகவும் சுவையாகவும், புளிப்பு மற்றும் நீர்ச்சத்து கொண்ட அன்னாசிப் பழத்தின் சுவை அபாரம். சப்புக் கொட்ட வைக்கும் ருசியான அன்னாசிப் பழத்துடன் உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்து உண்டால் பரம சுகமாக இருக்கும்... இந்த சுவையான பழத்தை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அன்னாசி ஜூஸ்


அன்னாசியை சிலர் சாறாக எடுத்து பருகுவார்கள். அதிலும் மழைக்காலத்தில் அன்னாசிப் பழம் அதிகமாகக் கிடைக்கும். இந்த பழம் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இந்தப் பழத்தை உட்கொள்வது பல நோய்களைப் போக்கும் என்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.


செரிமானத்தை மேம்படுத்தும் அன்னாசிப் பழம்


அன்னாசிப்பழத்தை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. செரிமானக்கோளாறுகளை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது, இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் அன்னாசி


அன்னாசிப்பழத்தில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது. இந்த சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கிறது. உடலை ஆரோக்கியமாக மேம்படுத்த அன்னாசிப்பழம் உதவுகிறது.


மேலும் படிக்க | அடிவயிறு கொழுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கா? அப்போ உடனே இதை படியுங்கள்


இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பைனாப்பிள் பழம்


அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும். கொலஸ்ட்ரால் குறைக்கும் பண்புகள் கொண்ட அன்னாசிப்பழத்தை உண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.


உயர் இரத்த அழுத்த பிரச்சனை நீங்கும் 


அன்னாசியின் மருத்துவ குணங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 


மேலும் படிக்க | செவ்வாழையை சாப்பிட்டா இதயத்துக்கு நல்லது! ஏன் எப்படி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்!


ஆரோக்கியமான சருமத்திற்கு அன்னாசி


அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்தில் உள்ள கறைகளை குறைத்து, சருமத்திற்கு பொலிவை தருகிறது.


அன்னாசியின் பக்க விளைவுகள்


அன்னாசிப்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பல உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அன்னாசி சாப்பிடலாமா? என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.


சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு அல்லது உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்கள் அன்னாசி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் அதிக சர்க்கரை உள்ளது. இதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிக அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் அன்னாசியை ஓரிரு துண்டுகள் மட்டும் சாப்பிடலாம்.  


(பொறுப்பு துறப்பு: இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த... இந்த 5 பருப்புகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ