கொலஸ்ட்ரால் அதிகமானால், இந்த 3 பாகங்களில் மாற்றம் தெரியும்: எச்சரிக்கை தேவை
High Cholesterol Symptoms: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, உடலின் மூன்று பாகங்களில் மாற்றங்கள் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கண்கள், காதுகள் மற்றும் தோல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்நாட்களில் கொலஸ்ட்ரால் பிரச்சனை அனைவருக்கும் உள்ள பிரச்சனையாக உள்ளது. மோசமான வாழ்க்கை முறையால் கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாகிறது.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. ஆனால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது சிலருக்குத்தான் தெரிகின்றது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலின் 3 பாகங்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும்
தோலில் வரும் மாற்றங்கள் அதிகரிப்பது கொலஸ்ட்ராலின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக நம்பப்படுகிறது. கொலஸ்ட்ரால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தத்தை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும். குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அதிக அடர்த்தி கொழுப்புப்புரதம் நல்ல கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படும். கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் பிளேக் குவிவதற்கு காரணமாகிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | மூட்டு வலி முதல் நீரிழிவு நோய் வரை: கற்பூரவல்லியின் அற்புத நன்மைகள்
இந்த காரணங்களால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது
உணவில் உள்ள அதிகமான டிரான்ஸ் கொழுப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், மனித உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது. இதனுடன் உடல் பருமன், புகைபிடித்தல் மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தெரிவிக்கும் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது அவசியம்:
- கொலஸ்ட்ரால் அதிகரித்தால், கண்களிலும் மாற்றங்கள் தொடங்குகின்றன. கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, நோயாளிகளின் கண்ணின் கார்னியாவின் வெளிப்புற பகுதிக்கு மேலே அல்லது கீழே ஒரு நீல அல்லது வெள்ளை குவிமாடம் போன்ற ஒன்று காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தால், நீங்கள் நிச்சயமாக உங்கள் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- இது தவிர, உங்கள் சருமத்தின் நிறம் மாறத்துவங்கினால், கொஞ்சம் கவனமாக இருங்கள். ஏனெனில் இதுவும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாகும்.
- உங்கள் கைகளில் வலி இருந்தால், நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி கை வலி ஏற்படுவது உடல் ஆரோக்கியத்துக்கு சரியான அறிகுறி அல்ல என்று நம்பப்படுகிறது. இதுவும் அதிக கொலஸ்ட்ராலுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR