அன்னாசி பழம் மீது ஆசைப்பட்டு மோசம் போயிறாதீங்க
ஆசையாக இருக்கிறது என அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் அமில சுரப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை நீங்கள் உடனடியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆரோக்கியத்துக்கு அன்னாசி பழம்
பொதுவாக அன்னாசி பழம் அனைவருக்கும் பிடித்தமான பழங்களில் ஒன்றாக உள்ளது. அன்னாசிப்பழம் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜன் ஏற்றங்களால் நிரம்பி இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. இதிலிருந்து விட்டமின் சி சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இத்தகைய அன்னாசி பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என பார்க்கலாம் .
மேலும் படிக்க | அடிவயிறு கொழுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கா? அப்போ உடனே இதை படியுங்கள்
அளவுக்கு அதிகமாக வேண்டாம்
அன்னாசிப்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பல உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக சொல்லப்படும் நிலையில் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நீரழிவு நோயாளிகள் இதனை சாப்பிடும் விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அன்னாசி பழத்தின் அமிலத்தன்மையின் விளைவாக ஈறுகள் மற்றும் பற்கள் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
வயிற்றுப்போக்கு வாந்தி வரும்
அன்னாசி பழத்தோட சாறு மற்றும் தண்டில் என்சைம் இருக்கிறது. இந்த நொதி நம்மளுடைய உடலில் பல விதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். இயற்கையான பிரமலையின் ஆபத்தானதாக இருப்பதில்லை. ஆனால் இரத்தத்தை மெலிதாகும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் இதை அதிகம் எடுத்துக்கொண்டால் ரத்தப்போக்கு அதிகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த பழத்தை பழுக்காமல் உட்கொள்ளக்கூடாது, நன்றாக பழுக்காத பழம் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | உடல் எடை குறைய கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க: இன்னும் ஏகப்பட்ட நன்மைகளும் இருக்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ