Winter Beauty Care tips: குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவது சகஜம். இருப்பினும் சருமத்தை நன்கு பராமரித்தால் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம். இந்த பிரச்சனைக்கு சில மூலிகைகள் தீர்வாக அமையும். இவை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை பயக்கும். அவை வைட்டமின்கள், தாதுக்கள், நொதிகள் மற்றும் பிற மதிப்புமிக்க கூறுகளைக் கொண்டிருக்கின்றன. இவை தோல் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பதிவில், குளிர்கால அழகுப் பராமரிப்பில் நீங்கள் சேர்க்கக்கூடிய அத்தகைய 4 மூலிகைகள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.


1. துளசி
- துளசி (Tulsi) இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
- இலைகளை குளிர்வித்து பேஸ்ட்டை உருவாக்கவும்.


- இந்த பேஸ்ட்டை உங்கள் தோலில் தடவவும்.


- இது வீக்கத்தைக் குறைக்க உதவும்.


- இதனுடன், இது சருமத்தில் பளபளப்பைக் கூட்டுகிறது.


நன்மைகள் - துளசி பொதுவாக பல வகையான நோய்களுக்கு மருந்தாக வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலத்தில் மிகவும் பொதுவான சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிக்க இது உதவுகிறது.


2. மஞ்சள்
- முதலில் ஒரு ஸ்பூன் மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள்.


- சிறிது தயிரில் இதை ஒரு சிட்டிகை சேர்க்கவும்.


- இதனை தினமும் முகத்தில் தடவவும்.


-20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவும்.


- இது முகத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும்.


நன்மைகள்- மஞ்சள் (Turmeric) சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றவும், வலி ​​மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.


ALSO READ: பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதா? வறுத்து சாப்பிடுவதா? எதில் நன்மைகள் அதிகம்?


3. நெல்லிக்காய்
- ஒரு கைப்பிடி உலர்ந்த நெல்லிக்காயை எடுத்து, கரகரப்பாக அரைக்கவும்.
- இதை 100 மில்லி தேங்காய் எண்ணெயில் கலக்கவும்.
- இந்த எண்ணெயை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் நிரப்பவும்.
- பின்னர் சுமார் 15 நாட்கள் வெயிலில் வைக்கவும்.
- இப்போது இந்த எண்ணெயை வடிகட்டி சேமித்து வைக்கவும்.
 - நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதை உங்கள் தலைமுடியில் தடவவும்.
- இது முடி உதிர்வை குறைக்கும்.
- மேலும் முடி வலுவாக இருக்கும்.


நன்மைகள் - நெல்லிக்காய் ஆயுர்வேத சிகிச்சையில் மிகவும் பிரபலமான பொருட்களில் ஒன்றாகும். இது குளிர்காலத்தில் மிக எளிதாக கிடைப்பதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.


4. கற்றாழை


- கற்றாழை சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.


- இதனால் சருமம் பளபளப்பாகும்.


- கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்தில் பயன்படுத்தலாம்.


- அதை நேரடியாக முகத்தில் தடவவும்


- 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.


நன்மைகள் - கற்றாழை (Aloe Vera) ஒரு சக்திவாய்ந்த மாய்ஸ்சரைசர். இது தோல் மற்றும் முடியின் வறட்சியை நீக்க உதவுகிறது. காயங்கள், தீக்காயங்கள் மற்றும் வெட்டுகளை குணப்படுத்தும் துத்தநாகமும் இதில் உள்ளது.


குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்று அல்ல. இவை கல்வி நோக்கத்துடன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.


ALSO READ: இஞ்சியின் தோலை நீக்கி விட்டு பயன்படுத்துகிறீர்களா; இந்த செய்தி உங்களுக்கு தான்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR