கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த 5 அறிகுறிகள் தோன்றும், அலட்சியம் வேண்டாம்
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது சில அறிகுறிகளை நீங்கள் உணரலாம். அதன்படி கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்-
அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்: அதிக கொலஸ்ட்ரால் ஒரு தீவிர பிரச்சனையாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, தமனிகளில் பிளேக் உருவாகிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. அதேபோல் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு இதய நோய் போன்ற கடுமையான நோய்களையும் உண்டாக்கும். பொதுவாக கொலஸ்ட்ரால் என்பது உங்கள் கல்லீரலை உருவாக்கும் கொழுப்பு போன்ற ஒரு பொருளாகும். உயிரணு சவ்வுகள், வைட்டமின் டி மற்றும் சில ஹார்மோன்கள் உருவாவதற்கு இது அவசியமாகும். லிப்போபுரோட்டீன்கள் கொலஸ்ட்ராலை இரத்த ஓட்டத்தில் சுற்ற உதவுகிறது. ஆனால் சில நேரங்களில் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது. இது எல்.டி.எல் என்றும் அழைக்கப்படுகிறது. எல்டிஎல் அளவு அதிகரிப்பது பல கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் ஆரம்ப காலத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது சில அறிகுறிகள் தென்படும். வாருங்கள்,கொலஸ்ட்ரால் அதிகரித்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் , கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் அறிகுறிகள்
நெஞ்சு வலி
மார்பு வலி அதிக கொலஸ்ட்ரால் அறிகுறியாகும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது நெஞ்சு வலி ஏற்படும். சில நேரங்களில் இந்த மார்பு வலி மாரடைப்பின் அறிகுறியாகவும் கருதப்படுகிறது. இது தவிர, நீங்கள் கால்களில் வலியை உணரலாம்.
மேலும் படிக்க | கண்களில் ஏற்படும் இந்த 3 மாற்றங்கள் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைக் குறிக்கும்
2. எடை அதிகரிப்பு
தொடர்ந்து எடை அதிகரிப்பதும் அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாகும். உண்மையில், உடல் பருமன் அதிகரிக்கும் போது, கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயமும் அதிகமாகும். எனவே, நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், மார்பில் தொடர்ந்து வலி இருந்தால், இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கொலஸ்ட்ரால் அளவை உடனே செக் செய்யவும்.
3. அதிக வியர்த்தல்
அதிக வியர்வை அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம். இதனுடன், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போதும் அதிக வியர்வை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்க வேண்டும்.
4. தோல் நிறத்தில் மாற்றம்
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது சருமத்தின் நிறத்தில் மாற்றம் தெரியும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், தோலில் மஞ்சள் நிற சொறி காணப்படும். எனவே இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால், எச்சரிக்கையாக இருங்கள்.
5. பிடிப்புகள்
கால்கள், தொடைகள், இடுப்பு மற்றும் கால்விரல்களில் ஏற்படும் பிடிப்புகள் அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாகும். எனவே, உடலின் கடுமையான வலி ஏற்பட்டாலோ அல்லது தசைகளில் விறைப்பு ஏற்பட்டாலோ, இந்த நிலையை அலட்சியப்படுத்தாதீர்கள்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகள்
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவுமுறைகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். இதற்கு வறுத்த மற்றும் நொறுக்குத் தீனிகளை முற்றிலும் தவிர்க்கவும். மேலும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்: வியர்வை, மார்பு வலி, எடை அதிகரிப்பு, பிடிப்புகள் அல்லது வலிப்பு மற்றும் தோல் மஞ்சள் நிறமாக இருப்பது போன்றவையும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகளாகும். எனவே, இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஏற்படும் கொழுப்புக் கட்டிகளுக்கும் கேன்சருக்கும் தொடர்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ