21 ஆம் நூற்றாண்டில், வேகமான வாழ்க்கை முறை அடிக்கடி உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் உலகத்தில் ஒரு ஆபத்தான உடல்நலப் பிரச்சனையாக மாறியுள்ளது. இது ஒரு கரோனிக் சுகாதார நிலை, இதில் நமது உடலால் இரத்தத்தில் உள்ள உயர் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த நிலையில், கணைய சுரப்பிகள் குளுக்கோஸ் அளவை பராமரிக்க போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாது, அல்லது உடலின் செல்கள் இன்சுலினுக்கு பதிலளிப்பதை நிறுத்துகின்றன. ஆனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளன. முறையான மருந்து மற்றும் சுகாதார பராமரிப்பு இன்றியமையாதது என்றாலும், வாழ்க்கை முறை மாற்றங்களும் நீரிழிவு நோயைக் கையாள்வதற்கு உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த பழங்களைச் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்க்கரை நோயாளிகள் இந்த 5 பழங்களை சாப்பிட வேண்டும்


1. பேரிக்காய்
பேரிக்காய் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, எனவே இது இரத்த சர்க்கரை அளவை மிக விரைவாக அதிகரிக்க அனுமதிக்காது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3 மற்றும் வைட்டமின் பி9 நிறைந்துள்ளது. அத்துடன் பேரிக்காயில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது நார்ச்சத்து நிறைந்த பழம் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன.


மேலும் படிக்க | நீரிழிவு நோயை கால் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்!


2. கொய்யா
கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதுடன், கொய்யாவில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது. அதேபோல் ஆரஞ்சு பழத்தை விட கொய்யாவில் நான்கு மடங்கு வைட்டமின் சி உள்ளது.


3. ஆரஞ்சு
சிட்ரஸ் பழம் சர்க்கரை நோய்க்கு எதிராக அற்புதமாக செயல்படும். இது குறிப்பாக குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். அதேபோல் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, ஃபிளாவனாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.


4. பச்சை ஆப்பிள் 
பச்சை ஆப்பிள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சூப்பர்ஃபுட்டாக கருதப்படுகிறது. இந்த பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து, நியாசின், துத்தநாகம், இரும்பு மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளன. பச்சை ஆப்பிளில் சர்க்கரையின் அளவும் குறைவு. அதேபோல் சிவப்பு ஆப்பிள்களில் இயற்கையான சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் அவற்றைத் தேர்வு செய்யாதீர்கள்.


5. நாவல் பழம்
நாவல் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நன்மை பயக்கும் பழமாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சர்க்கரை நோய் 7 நாட்களில் குறைப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ