கரும்பு ஜூஸ் பிடிக்குமா? ஆனா இந்த பிரச்னை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்கணும்
Side effects of sugarcane juice: கரும்புச் சாற்றில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்துக்கள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, இவை நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான மூலப்பொருளாகும்.
Side Effects Of Sugarcane Juice: கரும்புச்சாறு ஒரு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும், இது இந்தியாவின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். குறிப்பாக கோடை காலத்தில் இந்த பானம் அதிகம் உட்கொள்ளப்படும். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. கரும்புச் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உடலின் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அத்துடன் இதில் இயற்கை சர்க்கரைகள் இருப்பதால் இது ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். இதுமட்டுமின்றி, கரும்புச் சாற்றில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களான இரும்பு சத்துக்கள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளதால், அவை நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்பு வலிமையை மேம்படுத்தவும், ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.
இந்த நிலையில் கரும்புச்சாறு ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், சிலர் இந்த ஜூஸை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது அவர்களின் உடல்நலத்தை பாதிக்கலாம். எனவே எந்தெந்த நபர்கள் கரும்புச்சாறு அருந்தக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
கரும்புச்சாற்றில் இயற்கையான சர்க்கரை அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும். அதனால்தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரும்புச்சாறு தீங்கு விளைவிக்கும் என்பார்கள்.
மேலும் படிக்க | எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!
சிறுநீரக பிரச்சினைகள்
கரும்பு சாற்றில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, இது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆபத்தானது.
கல்லீரல் நோய்
கரும்புச்சாறு குடிப்பது கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும், இது கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
தலைவலி
தலைவலி பிரச்சனையுடன் போராடுபவர்கள், கரும்பு சாறு குடித்தால் மேலும் பிரச்சனையை தூண்டும். உங்களுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை இருந்தால், கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்கவும். இதனால் தலைசுற்றல், தலைவலி போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.
குளிர் காய்ச்சல்
சளி, காய்ச்சல் வந்தால் கரும்புச்சாறு அருந்தக் கூடாது. இது தவிர கரும்புச்சாறு புண், இருமல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முகத்திற்கு பளபள பொலிவு கிடைக்க தயிரை இப்படி பயன்படுத்துங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ