உடல் எடையை குறைக்கும் ஜூஸ்: இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில், மக்கள் பல வித ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. துரித உணவுகள், உடலில் தேவையான இயக்கம் இல்லாமை, உடல் ஆரோக்கியத்தில் கவனம் இல்லாமல் இருப்பது என பல காரணங்கள் உடல் பருமனை ஏற்படுத்துகின்றன. உடல் எடையை குறைக்க நாம் பல முயற்சிகளை எடுக்கிறோம். எனினும், எடை குறைப்பு ஒரு மிகப்பெரிய விஷயமாகவே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்க பல எளிய மற்றும் இயற்கையான வழிகளும் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு வழி சாறு அதாவது ஜூஸ் ஆகும். ஆம், சில பழங்களில் சர்க்கரை மற்றும் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால், இவற்றின் சாறு நமக்கு நன்மை பயக்கும். உடல் எடையை எளிதாக குறைகும் ஜூசின் ரெசிபியை இந்த பதிவில் காணலாம். 


உடல் எடையை குறைக்கும் சாறு:


தேவையான பொருட்கள்:


- பீட்ரூட் 1 - நறுக்கியது


- 2 பேரிக்காய் - நறுக்கியது


- பாதி வெள்ளரிக்காய் - நறுக்கியது


- 1 டீஸ்பூன் இஞ்சி


- 1 கேரட் - நறுக்கியது


- புதினா இலைகள்


- உப்பு


- 2 கருப்பு மிளகு


- 1 எலுமிச்சை


மேலும் படிக்க | சுதாரியுங்கள் - இந்த அறிகுறிகள் இருந்தால் கல்லீரல் ஆபத்தில் இருக்கிறது 


எடை இழப்பு சாறு செய்யும் செயல்முறை 


எடையைக் குறைக்க பீட்ரூட், பேரிக்காய், வெள்ளரி, இஞ்சி, கேரட் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து ஜூஸ் செய்யவும். இப்போது அரைத்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் ஃபில்டர் செய்து கொள்ளவும். இதன் பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து உப்பு, மிளகு தூள் சேர்த்து சாறு தயார் செய்யவும். அதன் பின்னர் இந்த சாற்றை ஒரு கிளாஸில் ஊற்றி புதினா இலைகள் கொண்டு அலங்கரிக்கவும்.


இந்த ஜூசை எப்போது சாப்பிட வேண்டும்? 


உடல் எடையை குறைக்க முயற்சித்துக்கொண்டு இருப்பவர்கள் இந்த சாற்றை உட்கொள்ளலாம். இந்த சாற்றை காலை உணவில் சாப்பிடலாம். காலை உணவில் சாப்பிட முடியவில்லை என்றால், மதிய உணவில் சாப்பிடலாம். ஆனால் இரவில் இந்த ஜூஸை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இந்த ஜூஸில் வெள்ளரிக்காய், எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தியிருப்பதால் அதன் தாக்கம் குளிர்ச்சியாக இருப்பதால் இரவில் இதனை உட்கொள்வதால் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டதவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் உடலில் தென்படும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ