அதிக கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதற்கான குறிப்புகள்: கொலஸ்ட்ரால் என்பது நமது இரத்தத்தில் காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளாகும், அதன் அளவு இயல்பை விட அதிகமானால், அவை பல கடுமையான பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடும். நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்தத்தில் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 150 ஆக இருக்க வேண்டும். கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஏக) அளவு 100 எம்ஜி/டிஎல் ஆக இருக்க வேண்டும். இந்த அளவு சாதாரணமான அளவாக கருதப்படுகிறது. கொலஸ்ட்ரால் அளவு இயல்பை விட அதிகமாக இருந்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும். பொதுவாக நாம் இரத்தப் பரிசோதனை மூலம் கொலஸ்ட்ரால் அளவு கண்டறியலாம். பல நேரங்களில், அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, சில அறிகுறிகள் நம் உடலில் காணப்படும், அவை நம் உடலுக்கு எச்சரிக்கை மணிகளாகும். இந்த அறிகுறிகளைக் கண்டறிந்த உடனேயே மருத்துவரை அணுகவில்லை என்றால், பல அசம்பாவிதங்களை சந்திக்க நேரிடும். இந்த அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகப்படியான கொலஸ்ட்ராலில் இந்த அறிகுறிகள் தென்படும்
எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக அதிகரிக்கும் போது, அதன் தாக்கம் நம் காலில் உள்ள தோலில் தெரிய ஆரம்பிக்கிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் நிலையில், உங்கள் பாதங்களில் கடுமையான எரியும் மற்றும் தாங்க முடியாத வலியும் ஏற்படும். அதேபோல் காலில் உள்ள காயங்கள் மற்றும் புண்கள் நீண்ட காலமாக குணமடையாமல் இருப்பதும், அதிகரிக்கும் கொலஸ்ட்ராலின் அறிகுறியாகும். இந்த நோயால், கால்களின் தசைகளுக்கு நிறைய சேதம் ஏற்படுகிறது மற்றும் கால்விரல்கள் மற்றும் கீழ் மூட்டுகளின் தோல் குளிர்ச்சியாகவும் உணர்ச்சியற்றதாகவும் மாறும். இது தவிர, சருமம் மஞ்சள் நிறம், வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகளும் காணப்படுகின்றன. எனவே இது போன்ற அறிகுறிகள் தோன்றியவுடன், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும். ஏனெனில் அதிக கொலஸ்ட்ராலின் காரணமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படலாம். நீண்ட காலமாக அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் அது மரணத்தை விளைவிக்கும்.
மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம்
உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் எவ்வாறு கட்டுப்படுத்துவது
1. அதிக கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த, உணவில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டாம், மாறாக பருவகால பழங்கள், காய்கறிகள், ஓட்ஸ், வால்நட்ஸ் மற்றும் ஆளி விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
2. உடல் வொர்க்அவுட் மூலம் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டை பராமரிக்க முடியும். தினமும் சுமார் 30 நிமிடம் உடல் வொர்க்அவுட் மற்றும் உடற்பயிற்சி செய்தால், கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்.
3. கொலஸ்ட்ராலுக்கும் உடல் பருமனுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. எனவே இதற்கு உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். அதன்படி உணவில் மாற்றம், உடற்பயிற்சி, போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
4. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், புகை, மதுப் பழக்கத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். புகைபிடித்தல் மற்றும் மதுபானம் கொலஸ்ட்ரால் உட்பட பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அவற்றிலிருந்து விலகி இருப்பதன் மூலம் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஏற்படும் கொழுப்புக் கட்டிகளுக்கும் கேன்சருக்கும் தொடர்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ