Better Breakfast: குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் போடும் சுலபமான காலை உணவுகள்

Better Breakfast Options for Children: குழந்தைகளுக்கு காலை உணவுக்கு என்ன கொடுக்கலாம்? அது ஆரோக்கியமானதா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 26, 2022, 01:52 PM IST
  • காலை உணவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்
  • காலை உணவை சிறப்பாக உண்ணுங்கள்
  • குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான காலை உணவு
Better Breakfast: குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் போடும் சுலபமான காலை உணவுகள் title=

Better Breakfast Options for Children: குழந்தைகளின் உணவில் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும் என்பது அவர்களின் இன்றைய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, எதிர்கால உடல் நலனுக்கும் உகந்ததாக இருக்கும். அதிலும் குழந்தைகளின் காலை உணவு சரிவிகித ஊட்டச்சத்து உள்ளதாக இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு காலை உணவில் கொடுக்க்கும் உணவு அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இருந்தாலும், அதற்கான சரியான வழிமுறை தெரிவதில்லை. குழந்தைகளுக்கு காலை உணவுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்ற கேள்வி பெரும்பாலும் பெற்றோரின் மனதில் எழுகிறது. இந்தக் கேள்வி உங்களுக்கும் இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். , 

காலை உணவில் குழந்தைகளுக்கு ரவை உப்புமா கொடுக்கலாம். உப்மா செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்திற்கு பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும். ஆனால் அதில் காய்கறிகள் சேர்த்து வெஜிடபிள் உப்புமாவாக செய்துக் கொடுக்க வேண்டும். 

மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க 

ஆரோக்கியமான காலை உணவில் வேர்க்கடலை இருப்பது நல்லது.அதற்கு , வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட் ஒரு நல்ல தேர்வாகும். இரண்டு ரொட்டித் துண்டுகளை டோஸ்ட் செய்து, அதில் சியா விதைகள், நறுக்கிய வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் சேர்க்கவும். ஆரோக்கியமான சுலபமாக செய்யக்கூடிய பிரெட் டோஸ்ட் ரெடி. ஆனால், இது மைதாவில் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது.

மேலும் படிக்க | காலை உணவுக்கு சூப்பர் உணவுகள்! நாள் முழுவதும் சுறுப்பாக வைக்கும் Super Foods

குழந்தைகளின் உணவிலும் கஞ்சி சேர்க்கலாம். ஓட்மீலில் நார்ச்சத்து மற்றும் கால்சியம் இரண்டும் உள்ளன, இது பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியத்தை காக்கும். 

குழந்தைகளுக்கும் அவல் மிகவும் ஏற்ற உணவு. அவல் அனைவருக்குமே ஒரு சிறந்த காலை உணவாகும், இது குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் பயனுள்ளதாக இருக்கும். தவறாமல் குழந்தைகளுக்கு அவல் கொடுத்து வருவது நல்லது. புரதம் மற்றும் கால்சியம் இரண்டும் பனீரில் காணப்படுகின்றன. எனவே பனீர் சேர்த்த பரோட்டாவும் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு பனீர் கொடுத்தால், பற்கள் மற்றும் எலும்புகள் இரண்டும் பலப்படும்.

மேலும் படிக்க | உடல் சோர்வாக இருக்கிறதா? ஹீயூமோகுளோபின் குறைபாடாக இருக்கலாம்

குழந்தைகளின் காலை உணவில் முட்டையை சேர்க்கலாம். வேகவைத்த முட்டை அல்லது முட்டை ஆம்லேட்டாக செய்துக் கொடுக்கலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Cervical Pain: கழுத்து வலியில் இருந்து விடுபட சில எளிய பயிற்சிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News