உடல் ஆரோக்கியமும் தைராய்டும்: தைராய்டு என்பது ஹார்மோன் சுரப்பி ஆகும், இது வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. இது தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைப் பொறுத்து வேகத்தை குறைக்கிறது அல்லது அதிகரிக்கிறது. தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாதபோது உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. தைராய்டு காரணமாக, உடலில் பல அறிகுறிகள் காணப்படுகின்றன, இவற்றை சரியான நேரத்தில் அடையாளம் கண்டுகொள்வதன் மூலம் இந்த நோயிலிருந்து விடுபடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தைராய்டு 


தைராய்டு என்பது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான நோய். சில பெண்கள் ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்படுகின்றனர், அதிக வியர்வை, வெப்பம், எடை இழப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. உடல் எடை அதிகரிப்பு, இதயத்துடிப்பு குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.


கவனம் செலுத்த இயலாமை
தைராய்டு சுரப்பி சில ஹார்மோன்களை உங்கள் மூளைக்கு அனுப்பி அதன் அனைத்து செயல்பாடுகளையும் செய்ய உதவுகிறது. ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்படும் போது, ​​இந்த ஹார்மோன்களின் ஓட்டம் குறைகிறது, இதன் காரணமாக மூளை சரியாக வேலை செய்யாத நிலை உருவாகிறது. எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது, முடிவெடுப்பதில் சிரமம், விஷயங்களை நினைவு கொள்ள முடியாமல் இருப்பது, தெளிவாக சிந்திக்க சிரமப்படுவது என தைராய்டு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | குளிர்காலத்தை ஆரோக்கியமாக அனுபவிக்க பேரிச்சம்பழத்தை இந்த காம்பினேஷனில் சாப்பிடலாமே?


சோகமாக இருப்பது
ஹைப்பர் தைராய்டிசத்தில் கவலைகள் அதிகமாகும். மனச்சோர்வு அதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். அடிக்கடி சோகமாக, அசௌகரியமாக, மகிழ்ச்சியற்றவராக உணர்ந்தால், ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இயல்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம்.


கருத்தரிப்பதில் சிக்கல்
பல்வேறு ஆய்வுகளின்படி, பெண்களுக்கு தைராய்டு இருந்தால், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கரு தரித்தாலும் கருச்சிதைவு அல்லது பிரசவத்தின்போது அதிக ஆபத்து உள்ளது. பல நேரங்களில், தைராய்டு காரணமாக, குழந்தை முன்கூட்டியே குறைப்பிரசவத்தில் பிறக்கிறது அல்லது பிறந்த குழந்தையின் எடை மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, தைராய்டுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பது அவசியம்.


சீரற்ற மாதவிடாய்
தைராய்டின் அறிகுறிகளில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய். உங்கள் மாதவிடாய் சுழற்சியில் தொந்தரவு ஏற்பட்டால், இரத்தப்போக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது தைராய்டு காரணமாக இருக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட டீன் ஏஜ் பெண்களுக்கு முதல் மாதவிடாயை மிக விரைவாகவோ அல்லது தாமதமாகவோ ஏற்படும்.


மேலும் படிக்க | குளிர் காலத்தில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சூப்பர் டிப்ஸ்


முடி உதிர்தல்
தினமும் சில முடிகள் உதிர்வது இயல்பானது. ஆனால் உங்கள் தலைமுடி அதிகமாக உதிர்ந்து, முடியின் அடர்த்தி தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தால், நீங்கள் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும், இந்த பிரச்சனை பொதுவாக தீவிர தைராய்டு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே காணப்படுகிறது.


உயர் இரத்த அழுத்தம்
திடீரென்று உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், அது தைராய்டின் அறிகுறியாக இருக்கலாம். உண்மையில், செயலற்ற தைராய்டு குறைந்த நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்துகிறது, இது உங்கள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தை வழங்குவதில் பிரச்சனை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில், அதிகப்படியான தைராய்டு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் இதயத்தை வேகமாக துடிக்க வைக்கும்.


பார்வை மங்கலாவது
தைராய்டு காரணமாக உங்கள் கண்கள் பலவீனமாகலாம் அல்லது உங்கள் பார்வை மங்கலாம். தைராய்டு காரணமாக, அதிகப்படியான திரவம் கண்களைச் சுற்றியுள்ள திசுக்களில் குவிவதால் பார்வை மங்கலாகும். சில நேரங்களில் பார்க்கும் பொருட்கள் எல்லாம் இரட்டிப்பாக தெரியத் தொடங்கும்.


மேலும் படிக்க | Figs: நோய்களை போக்கும் அத்தியின் நன்மைகள்! ஆண்மைக் குறைவை சீராக்கும் அற்புதமான பழம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ