Anxiety Control: ஆங்சைட்டி உள்ளவரா நீங்கள்? மனபதற்றத்தை தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்!
Anxiety Tips in Tamil: ஆங்சைட்டி எனப்படும் மனப்பதற்றத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்பதை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து காெள்ளுங்கள்.
பலருக்கு ஆங்சைட்டி எனப்படும் பதற்ற நிலை அவ்வப்போது தோன்றி மறையும். சிலருக்கு மிகவும் அதிக பரபரப்பான சூழலிலும் பயம் அதிகமாகும் போதும் வரும். இது உண்மையில் இயல்பான ஒன்றுதான் என சில மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றன்றனர். சரி, இதை எப்படி கட்டுக்குள் வைத்துக்கொள்வது? வாங்க பார்க்கலாம்.
ஆங்சைட்டி என்றால் என்ன?
காரணமே இல்லாமல் உள்ளங்கை உள்ளங்காலில் அதிக அளவில் வியர்பதும் ஆங்சைட்டியின் ஒரு வெளிபாடாக இருக்கலாம் என சில மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். நமது உடல் அதிக அளவிலான பதற்ற நிலையை அடையும் போது ஆங்சைட்டி ஏற்படும். முதன் முறையாக ஒரு பெரும் கூட்டத்திற்கு இடையே பேசப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்போது நீங்களே அறியாமல் உங்களை ஒரு பயம் தொற்றிக்கொள்ளும். அதுதான் ஆங்சைட்டி. இது ஒரு சிலருக்கு எப்போதாவது வரும் ஒரு சிலருக்கு அடிக்கடி வரும்.
கட்டுக்குள் வைத்துக்கொள்வது எப்படி?
ஆங்சைட்டி ஏற்படுத்தும் பதற்றம் மற்றும் கவலையை கட்டுக்குள் கொண்டு வர வைக்கும் வழிமுறைகள்.
உடலிற்கு வேலை கொடுங்கள்
நீங்கள் பதற்றத்தை உணரும் போது வேகமாக நடப்பது அல்லது படி ஏறி இறங்குவது பாேன்ற செயல்களில் ஈடுபடுங்கள். இது ஆங்சைட்டியில் இருந்து தற்காலிகமாக விடுபட உதவும். இத குறித்து பிரபல நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. அதில், ஆங்சைட்டி உள்ளோர் உடற்பயிற்சியில் ஈடுபடுகையில் தங்கள் பதற்றநிலையிலிருந்த சமநிலைக்கு வந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
மூச்சு பயிற்சி
பதற்றம் அதிகமாகும் போது மனதை நிதானப்படுத்த மூச்சு பயிற்சியினை மேற்கொள்ளுங்கள். அப்படி மூச்சு பயிற்சி மேற்கொள்கையில் உங்கள் மனதிற்குள்ளேயே 1,2,3 என 100 வரை எண்ணுங்கள். அல்லது உயிரெழுத்துகள்-மெய் எழுத்துக்களை மனதிற்குள்ளேயே கூற முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் கவனம் பதற்றத்திலிருந்த திசைமாறும்.
இசையை கேளுங்கள்
“பதற்றம் அதிகரிக்கும் போது பாடல் கேட்பது எல்லாம் நடக்குற காரியமா?” என்று நீங்கள் கேட்கலாம். பாடலில் மட்டும் இசை இல்லை. அனைத்திலும் இசை நிறைந்திருக்கிறது. அலை அடிக்கும் சத்தம், மழையின் போது காற்று வீசும் சத்தம் என பலவிதமான சத்தங்களும் இசைதான். இதை யூடியூபில் தேடினாலே கிடைக்கும். அதை ஹை வால்யூமில் வைத்து உங்களை சுற்று என்ன நடக்கிறது என்று கொஞ்சம் மறக்க முயற்சி செய்யுங்கள். இது கண்டிப்பாக உங்கள் பதற்றத்தை குறைக்க உதவும்.
மருத்துவ உதவியை நாடுங்கள்
உங்கள் பதற்றத்தை தற்காலிகமாக கட்டுப்படுத்த முடியுமே அன்றி, அதை முழுமையாக போக்குவதற்கு ஒரு மனநல மருத்துவரின் உதவி கண்டிப்பாக தேவைப்படும். இது போன்ற பதற்றமான மனநிலை அல்லது கவலையான மனநிலையில் இருக்கிறீர்கள் என்றால் மனநல ஆலோசகரை பார்ப்பது கண்டிப்பாக உங்கள் நிலையை மாற்ற உதவும். அவர் கூறும் விஷயங்களை கடைப்பிடித்தால் கண்டிப்பாக உங்களை பற்றிய புதிய புரிதல் உங்களுக்கள்ளேயே உண்டாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ