டயட் வேண்டாம்.. சாப்பிடும் போது இப்படி பண்ணுங்க! தொப்பையை குறைக்கலாம்!

Weight loss tips: உடல் எடை அதிகரிக்காமல் இருக்க கடுமையாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது, நமது அன்றாட பழக்கவழக்கங்களிலும் ஒரு சில மாற்றங்களை நாம் செய்ய வேண்டியது அவசியம்.

 

1 /5

வேலை பார்க்கும் இடங்களில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை தவிர்த்து சக ஊழியர்களுடன் அல்லது நண்பர்களுடன் நின்றுகொண்டோ அல்லது நடந்துகொண்டோ பேச பழகுங்கள்.  கூடுதலாக 20-30 நிமிடங்கள் நடப்பது 100 கலோரிகள் வரை எரிக்க உதவும்.  

2 /5

டிவி பார்க்கும்போது க்ரஞ்சஸ், ஸ்குவாட்ஸ் போன்ற எளிய பயிற்சிகளை செய்வதால் உங்களுக்கு களைப்பும் தெரியாது மற்றும் கலோரிகளும் எரிக்கப்பட்டு வடிவான உடலை பெறலாம்.  

3 /5

சுவைக்காக சீஸ், வெண்ணெய், மயோனைஸ் மற்றும் கெட்ச்அப் போன்ற உணவு வகைகளை சாப்பிடக்கூடாது.  இந்த வகை உணவுகளில் அதிகப்படியான கலோரிகள் உள்ளது, இவை உங்கள் உடல் எடையை அதிகரித்துவிடும்.  

4 /5

சர்க்கரை சேர்த்த காபி, காப்புசினோ அல்லது டார்க் சாக்லேட் போன்ற காபி வகைகளை குடிப்பதை தவிர்ப்பது உடலில் கலோரிகள் அதிகம் சேர்வதை தடுக்கும்.  இதற்கு பதிலாக நீங்கள் சர்க்கரை சேர்க்காத பிளாக் காபியை குடிக்கலாம்.  

5 /5

ஒவ்வொரு நாளும் நீங்கள் குறைந்தது 100 முதல் 200 வரையிலான கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.  உடற்பயிற்சி மட்டுமின்றி உணவுக்கட்டுப்பாடும் இருக்க வேண்டும்.