உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவது மற்றும் உதடு கறுத்து போவது போன்றவற்றை தடுத்து உங்கள் உதட்டை அழகாகவும் சிவப்பாகவும் மாற்ற எளிய முறையை பின்பற்றினால் போதும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கற்றாழை ஜெல்


கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் (Lips) தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் கருப்பு நிறத்தை அகற்றிவிடும்


ALSO READ | உதடுகளை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகள்


ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில்


ஆலிவ் எண்ணெய் (Olive Oil) மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது உதடுகளுக்கு தடவி வந்தால், ஒரு வாரத்தில் உதடுகளில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.


தயிர்


தயிரில் (Curd) எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுத்து மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.


மில்க் க்ரீம்


மில்க் க்ரீம்மில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அவை உதடுகளை ஈரப்பதத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும். அதற்கு மில்க் க்ரீமை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.


ALSO READ | முத்தம் பற்றியும் அதன் நன்மை, தீமைகள் !!!


தேன்


தேனில் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி இருப்பதால் அவை உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR