Curly Hair: சுருள் முடியை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது எப்படி? சில சிம்பிள் டிப்ஸ் இதோ..!
Tips for Curly Hair: சுருள் முடி வைத்துள்ளோர் தங்களது முடியை பாதுகாக்க முடியாமல் பலர் திணறுகிறார்கள். அதற்கான சிம்பிள் டிப்ஸ் இதோ!
சுருள் முடி உடையை பெண்களையோ ஆண்களையோ பார்த்தால், சில ஸ்ட்ரெய்ட் முடி அழகிகள்/அழகன்களுக்கு பொறாமையாக இருக்கும். ஆனால், சுருள் முடி வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். நூடுல்ஸ் மண்ட, சுருட்ட மண்ட என சுருள் முடி வைத்திருப்போருக்கு பல பெயர்கள் உண்டு. சில தமிழ் நடிகைகள் கூட, சுருள் முடி அழகிகளாக உலா வருகின்றனர், அனுபமாவில் ஆரம்பித்து ரித்திகா சிங் வரை பலர், சுருட்டை முடியில் அழகு தேவதைகளாக இளைஞர்களின் கண்களுக்கு தெரிகின்றனர். எந்தளவிற்கு அதில் அழகு இருக்கிறதோ, அதை பாதுகாப்பாக வைத்துகொள்வதில் சிரமங்களும் இருக்கிறது. சுருட்டை முடி உடையோருக்கு கம்மியான அளவு முடி இருந்தாலும், அடர்த்தியாக இருப்பது போல இருக்கும். பொதுவாகவே நமது சிகையை தூசு, வெடிப்பு, வெயில் என நம்மை சுற்றி இருக்கும் பலவகையான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். சரி, சுருட்டை முடியை எப்படி பாதுகாத்து கொள்ளலாம்? சில சிம்பிள் டிப்ஸ்.
எப்போது தேவையோ அப்போது மட்டும் தலை குளியுங்கள்:
மிருதுவான கேசம் உடையோர் கூட அடிக்கடி முடியை கழுவினால், முடி உதிர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திப்பர். சுருள் முடி உடையோர் அடிக்கடி தலைக்கு குளிப்பதை தவிர்க்கவும். அடர்த்தியான சுருட்டை முடி உடையோர், அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது. உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருந்தால், பார்ட் பார்ட்டாக பிரித்து முடியை அலசலாம். இது, முடி சிக்காகவதில் இருந்தும் முடி உடைவதில் இருந்தும் தடுக்கும். உங்கள் சிகையை ஜெல், க்ரீம் போன்ற காஸ்மெடிக்ஸை வைத்து ஸ்டைல் செய்பவராக இருந்தால், கண்டிப்பாக ஷாம்பூ தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
முடியை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளுங்கள்:
ஈரப்பதமாக வைப்பது என்றால், அடிக்கடி தண்ணியை எடுத்து தலையில் ஊற்றிக்கொள்வது இல்லை. தலையையும் முடியையும் காய்ந்து போகாமல் பார்த்து கொள்வதுதான். ஏனென்றால் சுருள் முடி அடிக்கடி காய்ந்து போய்விடும். முடியை காயாமல் பார்த்துக்கொள்ள, அடர்த்தியான கண்டிஷனரை உபயோகப்படுத்துங்கள். அப்படியில்லையெனில் தலையில் எண்ணெய் தடவி பழகுங்கள். தலைக்கு குளித்தவுடன், முடியில் ஈரப்பதம் இருக்கும் போதே மாய்ஸ்ட்ரைசர் அல்லது கண்டிஷனரை உபயோகப்படுத்த வேண்டும்.
“மண்ட பத்தரம்..”உச்சந்தலையை பார்த்துக்கொள்ளுங்கள்:
சுருள் முடி இருப்பவர்கள், நீண்ட நாட்கள் முடியை அலசாமல் போனால் உச்சந்தலை காய்ந்து பொடுகு வர வாய்ப்புகள் அதிகம். இதைத்தவிர்க்க எண்ணெய் வைத்தாலும் பொடுகின் பிடியில் இருந்து தப்ப முடியாது. அதனால், பொடுகை எதிர்க்கும் திறன் கொண்ட anti-dandruff ஷாம்பூவை உங்கள் உச்சந்தலையில் தேய்த்து 2-4 நிமிடங்கள் கழித்து முடியை கழுவுங்கள். அப்படியும் பொடுகு தொல்லை விடவில்லை என்றால், நல்ல தோல் மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
முடியை சிக்கெடுங்கள்:
சுருள் முடி, எளிதில் சிக்காகும் தன்மை உடையது. பொதுவாக தலைக்கு குளிக்கும் போதுதான் சிக்கு அதிகமாக விழும். இதைத்தவிர்க்க, முடியை அலசியவுடன் உங்கள் கையை வைத்தோ, அல்லது மர சீப்பை வைத்தோ முடியை சிக்கெடுக்கலாம். இதனால், உங்கள் முடி உதிர்வதையும் உடைவதையும் தவிர்க்கலாம்.
வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்:
வெயிலில் உள்ள அல்ட்ரா வைலட் கதிர்கள், சுருள் முடியை காய்ந்து போக செய்யும். இதிலிர்ந்து தற்காத்துக்கொள்ள, தலையை துப்பட்டா வைத்து மூடுங்கள். அல்லது, மாய்ஸ்ட்ரைசரை உபயோகப்படுத்துங்கள்.
தூங்கும் போதும் கவனம்:
தூங்கும் போது, கொண்டை போட்டுக்கொண்டோ குதிரை வால் போட்டுக்கொண்டோ தூங்க வேண்டாம். அதே போல முடியை விரித்துக்கொண்டும் தூங்க கூடாது. இதனால், உங்கள் முடி உதிரும், உடையும். இதனால், தளர்வான பின்னலையோ குதிரை வாலையோ போட்டுக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ