பல்வலி, மஞ்சள் கறை நீக்க இதை மற்றும் செய்தால் போதும்.. மேஜிக் வீட்டு வைத்தியம்
Home Remedy For Teeth Pain: பல்வலி 1 அல்லது 2 நாட்களுக்கு மேல் நீடித்தால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
Home remedy for teeth pain : பல் வலி உங்கள் பற்கள் அல்லது ஈறுகளில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உங்களுக்கு பல்வலி இருந்தால், அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியமாகும், அப்போதுதான் இதிலிருந்து நிவாரணம் பெற முடியும். அதே நேரத்தில், பல்வலி 1 அல்லது 2 நாட்களுக்கு மேல் நீடித்தால், கட்டாயம் நீங்கள் ஒருமுறை மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை நிவாரணம் பெறலாம்.
பல் வலியிலிருந்து விடுபடுவது எப்படி - How to get relief from toothache
1- உங்கள் பற்களில் பூச்சிகள் இருந்தாலோ, அல்லது பற்களில் மஞ்சள் அல்லது வலி இருந்தாலோ, நீங்கள் ஒரு சிட்டிகை படிகாரம், இரண்டு சிட்டிகை கல் உப்பு மற்றும் இரண்டு கிராம்பு துண்டுகளை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீர் நன்கு கொதித்ததும் இவற்றை வடிகட்டி வாய் கொப்பளிக்கவும். இதன் மூலம் வலி மற்றும் பையோரியா பிரச்சனையில் இருந்து நீங்கள் நிவாரணம் பெற முடியும்.
2- அதே நேரத்தில், கிராம்பு எண்ணெய் அல்லது கிராம்பு துண்டுகளை மட்டும் சாப்பிட்டாலும் பல்வலியிலிருந்து பெரிய அளவில் நிவாரணம் பெறலாம். கிராம்பு ஒரு வகையான இயற்கையான வாய் புத்துணர்ச்சியாக கருதப்படுகிறது. மேலும் வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தை நீக்கவும் இது உதவுகிறது.
மேலும் படிக்க | இந்த 4 உணவுகளை தினசரி சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்!
3- இது தவிர பல்வலியில் இருந்தால் அகரக்கரா பூவிலிருந்து நிவாரணம் பெறலாம். இதற்கு வலி உள்ள பல்லில் ஒரு நிமிடம் இதை வைத்தால் போதும். இந்த பூவை வைத்து ஒரு நிமிடத்தில் நிம்மதி அடைவீர்கள். அதுமட்டுமின்றி, பற்களில் சிக்கிக் கொள்ளும் பூச்சிகளையும் இந்தப் பூ அழிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இந்த மருந்து தொண்டை வலிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
4- பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். பேக்கிங் சோடா பற்களை சுத்தம் செய்யவும், பல் சிதைவை நீக்கவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் வடிவில் தயார் செய்துக் கொள்ளவும். பின்னர் இந்த பேஸ்ட்டை பிரஷ்ஷில் எடுத்துக் கொண்டு பற்களில் தேய்த்தால் பற்களை சுத்தம் அடையும். அதனுடன் பற்கள் பளபளக்கும். அதுமட்டுமின்றி இது பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்குவதோடு, கேவிட்டியை போக்க உதவுகிறது.
5-மஞ்சள் பேஸ்ட் சிறந்த நிவாரணி. அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மஞ்சள் பேஸ்ட், பற்களில் தேய்க்கலாம். இதற்கு மஞ்சளில் சிறிது கடுகு எண்ணெய் கலந்து, இந்த பேஸ்டுடன் பற்களை சுத்தம் செய்யலாம். இந்த பேஸ்ட் அழுக்குகளை நீக்க உதவும். அதனுடன் இது வாய் துர்நாற்றத்தையும் போக்க உதவுகிறது மற்றும் பற்களின் மஞ்சள் நிறத்தையும் போக்க உதவும்.
மேலும் படிக்க | கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ