உடலில் மற்ற வலியை ஏதாவது செய்து குறைத்துவிடலாம். ஆனால் இந்த பல் வலி வந்துவிட்டால்உயிர் போகும் வலி போலத் தோன்றும். பல் வலி உடலுக்கு மிகவும் வேதனையளிக்கும். பற்களில் உள்ள வலியானது குழியின் காரணமாகவும் இருக்கலாம் அல்லது பாக்டீரியா தொற்று, கால்சியம் குறைபாடு அல்லது பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது போன்றவற்றையும் காரணமாக இருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெங்காயம் பல் வலியைப் போக்கும்
வெங்காயத்தைப் பயன்படுத்தினால் பல்வலி நீங்கும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்து. இப்போது வெங்காயத்தை பல்வலிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தான் கேள்வி. பற்களின் பிரச்சனையை நீக்க வெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கே விரிவாக அறிந்துக்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | Neeri-KFT சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா; மருத்துவர் கூறுவது என்ன..!!


பற்களில் வெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
வெங்காயம் மற்றும் எலுமிச்சையை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் பல பல் பிரச்சனைகளை சமாளிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலவையை தயார் செய்துக்கொள்ள்வும். இப்போது தயாரிக்கப்பட்ட கலவையை வெங்காய துண்டுகள் வழியாக தேய்க்கவும். இப்படிச் செய்வதன் மூலம், குழியில் இருந்து நிவாரணம் பெறுவது மட்டுமல்லாமல், பல்வலியும் நீங்கும்.


வெங்காயம் பற்களை சுத்தம் செய்யும்
பற்களில் வெங்காயத்தைப் பயன்படுத்தினால், துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் வரலாம் என்று பெரும்பாலும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் வெங்காயத்தை உப்பு சேர்த்து பயன்படுத்தினால், அது பற்களை நன்கு சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், பற்களின் வலியையும் நீக்கும். அத்தகைய சூழ்நிலையில், வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக நறுக்கி அதன் மீது உப்பு தூவி பற்களில் தேய்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் பலன்கள் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் வேறு வித  சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. இதனை பின்பற்றும் முன், மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)


மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR