விருந்து என்றால், மேற்கத்திய உணவு வகைகளை விரும்பும் இளைய தலைமுறைக்கு, இந்த சிறுதானியத்தை கட்டாயம் கொடுங்கள்.  சிறுதானியத்தில் ஒன்றான கம்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தொடர்ந்து கம்பு உணவை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  பலவேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட கம்ப்பில், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கம்பில் உள்ள சத்துக்கள்


கம்பில் உள்ள அதிக அளவிலான புரத சத்து, உடலிற்கு வலுவளித்து ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. 100 கிராம் கம்பில் கிட்டத்தட்ட 15 கிராம் அளவிற்கு புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. புரதச்சத்து இந்த அளவு வேறு எந்த தானியத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


கம்பு உணவுகள்


குறைந்த அளவு கொழுப்பு கொண்ட கம்பைக் கொண்டு செய்யப்படும், கம்மங்கூழ், புட்டு, ரொட்டி, தோசை, அவல் என விதவிதமான பதார்த்தங்களை சாப்பிடுங்கள்.  


மேலும் படிக்க | அடிக்கடி கண்களில் வலி ஏற்படுகிறதா? இந்த தவறை மட்டும் பண்ணாதிங்க!


உடல் எடையைக் கட்டுப்படுத்தும் கம்பு


கம்பில் உள்ள வளமான நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையை  கட்டுக்குள் வைக்கும்.எனவே உடல் உடல் எடையினை குறைக்க விரும்புவார்கள் தினசரி கம்பு சேர்த்து கொள்வது நல்லது. 


உடல் சூட்டைத் தணிக்கும் கம்பு


நமது இன்றைய உணவுமுறை காரணமாக உடல் சூடு பிரச்சனை அதிகரித்திருப்பதால், பல்வேறு நோய்கள் நம்மை பாதிக்கின்றன. கம்பு, உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து உணவில் கம்பு சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மலச்சிக்கலை போக்கும் கம்பு


இன்று பலருக்கும் இருக்கும் மலசிக்கல் பிரச்சனையைத் தீர்க்க, கம்பில் உள்ள நார்சத்து அவசியமானதாகும். 


மேலும் படிக்க | ரஸ்க் சாப்பிட்டு ரிஸ்க் எடுக்காதீங்க! ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்!


நீரிழிவு நோயாளிக்கு சிறந்தது கம்பு


குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் (glycemic index) கொண்ட கம்பை தொடர்ந்து பயன்படுத்தினால், நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.  


தினசரி உணவில் கம்பு எடுத்துக் கொள்ளலாமா?


கம்பு தினசரி சாப்பிட்டால், உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பதால், வாரம் இரண்டு நாட்கள் மட்டும் சேர்த்துக் கொண்டால் போதும். கம்பஞ்சோறு, தினை சாதம், கேழ்வரகு அடை, வரகரிசி, சோளம், குதிரைவாலி என்று சிறு தானியங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிடப் பழகினால், வாழ்க்கை முழுக்க ஆரோக்கியமாக இருக்கலாம்.


மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் தோன்றினால் ஜாக்கிரதை: இவை கொலஸ்ட்ராலின் அபாய அறிகுறிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ