Kiwi Fruit for Covid: கோவிட் ஏற்படாமல் தடுக்கும் கிவி பழத்தின் சூப்பர் நன்மைகள்!

கொரோனா வைரஸ் அபாயத்தைத் தடுக்க கிவி பழம் உதவும். வாரத்திற்கு ஓரிரு கிவி பழங்களை சாப்பிடுவதன் மூலம், சுவாச நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும். கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம், வறட்டு இருமல் போன்றவற்றை சரிசெய்து, நுரையீரலை சரியாக செயல்படச் செய்யும்  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 13, 2021, 04:16 PM IST
  • கோவிட் ஏற்படாமல் தடுக்கும் கிவி
  • சிட்ரஸ் பழம் கிவி புற்று நோயை தடுக்கும்
  • ஆரஞ்சு பழத்தில் இருக்கும் அளவு வைட்டமின் சி, கிவி பழத்தில் இருக்கிறது
Kiwi Fruit for Covid: கோவிட் ஏற்படாமல் தடுக்கும் கிவி பழத்தின் சூப்பர் நன்மைகள்! title=

புதுடெல்லி: சிட்ரஸ் வகை பழங்களுள் கிவி பழம் மிகவும் நல்லது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட இந்தப் பழம், இனிப்பும் புளிப்பும் கலந்து வித்தியாசமான ருசியில் இருக்கும். ஆனால் பலருக்கு கிவி பழத்தின் நன்மைகள் தெரியாது. கிவி பழத்தை சர்வரோக நிவாரணி என்று சொன்னாலும் தவறில்லை.

தற்போதைய கொரோனா வைரஸ் அபாயத்தைத் தடுக்க கிவி பழம் உதவும். வாரத்திற்கு ஓரிரு கிவி பழங்களை சாப்பிடுவதன் மூலம், சுவாச நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும்.

கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம், வறட்டு இருமல் போன்றவற்றை சரிசெய்து, நுரையீரலை சரியாக செயல்படச் செய்யும். முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு கிவி பழம் மிகவும் நல்லது. இதற்கு இதில் உள்ள வைட்டமின் சி தான் காரணம்.

Also Read | Vitamin D எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸ் அபாயம் குறையுமா? உண்மை இதுதான்…

கிவி பழத்தில் நீரில் கரையக்கூடிய மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் அனைத்தும் உள்ளன. அதில் வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆரஞ்சு பழத்தில் இருக்கும் அதே அளவு வைட்டமின் சி, கிவி பழத்தில் இருக்கிறது தெரியுமா?  

கிவி பழத்தில், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், போரான், செலினியம், சோடியம், ஜிங்க் என பல்வேறு முக்கிய கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த அனைத்து சத்துக்களும் உடலின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானவை.

கிவி பழத்தில் கால்சியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. 60 கிராம் எடை கொண்ட ஒரு கிவி பழத்தில் சுமார் 23 மிகி கால்சியம் நிறைந்துள்ளது. வேறு எந்த பழத்திலும் இந்த அளவு கால்சியம் இல்லை. எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் உதவு கால்சியத்தை போதுமான அளவில் பெற கிவியை தொடர்ந்து உண்வது நல்லது.

Also Read | Weight Loss: முட்டைகோஸ் ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா!!!

அதேபோல் கிவி பழத்தில் செரடோனின் (Serotonin) அதிக அளவில் உள்ளது. இது செரிமானம் மற்றும் இதயத்தின் செயல்பாட்டிற்கு அவசியமான சத்துக்கள். சோம்பலாக இருப்பவர்கள், தூக்கம் வராமல் தவிப்பவர்கள் கிவி பழத்தை சாப்பிட்டால், நிம்மதியான தூக்கத்திற்கு உதவுவதோடு, புத்துணர்ச்சியுடனும் இருக்கச் செய்யும். 

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், மோனோஅன் சாச்சுரேட்டட் கொழுப்புகள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்ற அனைத்து வகை கொழுப்பு அமிலங்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்படுபவை. இவை கிவி பழத்தில் உள்ளன.

கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். போதிய அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலுக்கு கிடைத்தால், அது குடல் புற்றுநோய், இதய நோய், , பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கும். இதில் உள்ள ப்ளேவோனாய்டு சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். கிவிப் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். 

Also Read | Health Benefits of Soya: அசைவத்திற்கு இணையான புரதம் கொண்ட சோயா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News