Weight Loss Tips: தொப்பை கொழுப்பை குறைய பாட்டி வைத்தியம்
Reduce Belly Fat: தொப்பை கொழுப்பால் நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அத்தகைய சூழ்நிலையில், தொப்பை கொழுப்பை எவ்வாறு அகற்றுவது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
வயிற்றின் உள்ளிருக்கும் உறுப்புகளை உறுதியோடு காத்து உடலோடு ஒட்டியிருந்தால் தான் அது வயிறு. அதுவே விரிந்து தொங்கும் அளவுக்கு அதிகமாகும் போது அதை தொப்பை என்று அழைப்பார்கள். அத்தகைய தொப்பை கொழுப்பால் நீங்கள் சிரமப்படுகிறீர்களானால் இனி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் உங்களின் உணவுமுறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் வயிற்றை சுற்றி இருக்கும் தொப்பை கொழுப்பை எளிதாக குறைக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், தொப்பை கொழுப்பை எவ்வாறு எளிதில் கரைக்க முடியும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
வயிற்றை சுற்றி இருக்கும் தொப்பை கொழுப்பைப் போக்க, இந்த முக்கிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும்
ஆளிவிதை: ஆளி விதையின் தண்ணீரை குடிப்பதன் மூலம் உங்கள் அன்றாட நாளை தொடங்குங்கள். ஏனெனில் இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. அதன்படி ஆளி விதையை சிறிது தண்ணீரில் ஊறவைத்து அதன் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து, விதைகளை மென்று சாப்பிட்டு வரவும்.
மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்
பாசிப் பயறு தோசை: ஆளி விதை தண்ணீர் குடித்து நாளை தொடங்கிய பின்னர், காலை உணவில் பாசிப் பயறு தோசையுடன் வீட்டில் தயாரித்த புதினா சட்னியை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள புரதங்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது மற்றும் புதினா சட்னி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகரை தினமும் உணவு சாப்பிடும் முன் எடுத்துக் கொள்ளுங்கள், இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இதற்காக நீங்கள் ஒரு கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிடுங்கள்: பழங்கள் மற்றும் புரோபயாடிக்குகளுடன் கூடிய தயிர் மற்றும் சியா விதைகளுடன் மோர் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை சிற்றுண்டியாக சாப்பிடலாம். இது உங்கள் வயிற்றை சீராக வைத்திருக்க உதவுகிறது.
கல் உப்பு: உங்கள் இரவு உணவை கல் உப்பில் சமைக்கவும், இது குடல் இயக்கத்தை அதிகரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. இது தொப்பையை குறைக்க உதவுகிறது.
இயற்கை இனிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்: நீங்கள் இனிப்பு பிரியராக இருந்தால் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக, நாட்டு சர்க்கரை, தேன் மற்றும் பேரிச்சம்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ