ஆரஞ்சு ஜூஸ் பிடிக்குமா, ஜாக்கிரதை: இதனால் உடல் கொழுப்பு அதிகரிக்கலாம்

Health Alert: நீங்கள் உங்கள் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால் அல்லது எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், ஆரஞ்சு சாற்றைத் தவிர்க்க வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2022, 06:59 PM IST
  • ஆரஞ்சு ஜூஸ் பக்க விளைவுகள்.
  • இந்த சாறு தயாரிப்பில் அதிக சர்க்கரை கலக்கப்படுகிறது.
  • கொழுப்பை அதிகரிக்கிறது.
ஆரஞ்சு ஜூஸ் பிடிக்குமா, ஜாக்கிரதை: இதனால் உடல் கொழுப்பு அதிகரிக்கலாம் title=

ஆரஞ்சு ஜூஸ் பக்க விளைவுகள்: கோடை காலத்தில் ஜூஸின் மோகம் அதிகமாகும். உடனடி ஆற்றலைப் பெறவும், உடல் குளிர்ச்சியடையவும் நாம் அனைவரும் குளிர்ந்த ஜூஸைக் குடிக்க விரும்புகிறோம். குறிப்பாக பழச்சாறுகள் நம் அனைவருக்கும் பிடிக்கும். இவற்றில் ஆரஞ்சு சாறு மிகவும் விரும்பப்படும் சாறுகளில் ஒன்றாகும்.

சந்தையில் கிடைக்கும் டின்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் முதல் குளிர்சாதனக் கிடங்கு மூலம் கிடைக்கும் ஆரஞ்சு வரை ஆரஞ்சு பழச்சாற்றை நாம் மிகவும் விரும்புகிறோம். ஏனெனில், இந்த ஜூஸில் வைட்டமின்-சி அதிகம் உள்ளதாகவும், உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்யும் என்றும் நாம் அனைவரும் நினைக்கிறோம்.

ஆரஞ்சு இந்த இரண்டு நன்மைகளையும் தருகிறது என்பது உண்மைதான். ஆனால் ஆரஞ்சு சாறு என்று வரும்போது, ​​தரத்தில் ஆரஞ்சு பழத்தின் முன் அதன் நன்மைகள் சற்று குறைவாகவே உள்ளன. அதாவது ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதை விட ஆரஞ்சு சுளைகளை சாப்பிடுவது அதிக பலன் தரும். 

ஆனால் ஆரஞ்சு கிடைக்காத சீசனில் என்ன செய்வது? அப்போது கிடைக்கும் பழங்களையே சாப்பிட வேண்டும் என்பதுதான் பதில். சீசனல் ஃப்ரூட்ஸ், அதாவது பருவகால பழங்கள் எப்போது ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆரஞ்சு சாறு ஏன் நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

1. மிக அதிகமான கலோரிகள்

நீங்கள் உங்கள் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால் அல்லது எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், ஆரஞ்சு சாற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் உடல் மெலிந்து போக அனுமதிக்காது. 

நீங்கள் பாக்கெட்டுகளில் கிடைக்கும் ஆரஞ்சு ஜூஸை குடித்தாலும் சரி, அல்லது ஜூஸ் கடையில் இருந்து குடித்தாலும் சரி, இந்த சாறு தயாரிப்பில் அதிக சர்க்கரை கலக்கப்படுகிறது. இது கூடுதல் கலோரி வடிவில் உடலில் சேமிக்கப்படுகிறது. நீங்கள் தினமும் ஒரு கிளாஸ் ஜூஸ் குடித்தால், ஒரு வருடத்தில் ஆரஞ்சு சாறு மூலம் மட்டுமே உடலில் சுமார் 14 கிலோ சர்க்கரை செரும்!

மேலும் படிக்க | Heart Attack: மாரடைப்புக்கு முன் இந்த 4 அறிகுறிகள் தென்படும் 

2. கொழுப்பை அதிகரிக்கிறது

ஆரஞ்சு ஜூஸில் சர்க்கரை அதிகம் இருப்பதால் இது கொழுப்பை அதிகரிக்கிறது. அதே போல் ஜூஸ் குடிக்கும் போது மிக விரைவாக குடிப்பது பலரது வழக்கம். அத்தகைய சூழ்நிலையில், அதிக சர்க்கரை உடலுக்குள் செல்கிறது. ​​​​உடலால் ஒரே நேரத்தில் அவ்வளவு சர்க்கரையைப் பயன்படுத்த முடியாது. எனவே உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமிக்கிறது. அதாவது, உங்கள் எடை அதிகரிப்பது உறுதி.

3. நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது

தினமும் ஆரஞ்சு பழச்சாறு குடிப்பவர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும். இந்த ஜூஸை தினமும் குடிப்பதால், அதிகப்படியான சர்க்கரை உடலுக்குள் செல்வதால், சிறுநீரகம் தொடர்பான நோய்களும் வர வாய்ப்புள்ளது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Diabetes நோயாளிகள் இந்த மஞ்சள் ரொட்டியை சாப்பிட வேண்டும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News