உயர் ரத்த அழுத்த பிரச்சனையா? இந்த உடற்பயிற்சிகளை ட்ரை பண்ணுங்க!
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கடினமான பயிற்சிகள் செய்வதை தவிர்த்து எளிமையான அதே சமயம் பயன் தரக்கூடிய உடற்பயிற்சிகளை தினமும் செய்யலாம்.
உயர் ரத்த அழுத்தம் என்பது இதயத்துடன் தொடர்புடையது, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் அதிகரித்து நமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பொதுவாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல, அதனால் தினமும் சில எளிய பயிற்சிகளை அவர்கள் செய்வதன் மூலம் இந்நோயின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளமுடியும். எந்த மாதிரியான பயிற்சிகளை நாம் தினமும் செய்யலாம் என்பது பற்றி இங்கே காண்போம். எந்த பயிற்சியை செய்வதற்கு முன்னரும் நாம் செய்யவேண்டியது வார்ம்-அப், குறிப்பாக உயர ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முதலில் வார்ம்-அப் செய்த பிறகே அடுத்தகட்ட பயிற்சிகளை தொடங்க வேண்டும், அப்போது தான் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அடுத்ததாக மெதுவாக நடப்பது, உடம்பை வளைப்பது போன்ற சில கூல்-டவுன் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்
பின்னர் உங்கள் உடலை நிலையாக வைத்திருங்கள், இது உங்கள் உடலை வசதியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நீண்ட நேரம் ஓய்வெடுப்பது நல்லதல்ல, அது உடற்பயிற்சி செய்வதறகான சங்கிலியில் சிறிது தொய்வை ஏற்படுத்துவிடக்கூடும், அதனால் குறைந்த நேரம் ஓய்வு போதுமானது. கார்டியோ பயிற்சிகள் இதய துடிப்பை வேகமாக்குகிறது, இதனை ரத்த அழுத்த நோயாளிகள் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும். அதனால் கார்டியோ பயிற்சிகளை பொறுமையாக செய்ய தொடங்குங்கள். வார்ம்-அப் மற்றும் கூல் டவுன் பயிற்சிகளை ஒத்ததே இந்த ஸ்ட்ரெட்ச் பயிற்சியும், இது ரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஒரு இதமான உணர்வை தருகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்திவிடக்கூடும், அதனால் தேவைக்கேற்ப மட்டும் ஓய்வெடுத்து கொள்ளுங்கள்.
நீச்சல் பயிற்சி அனைத்து விதமான உடல் பிரச்சனைகளுக்கும் தீர்வளிப்பதாக கருதப்படுகிறது. நீச்சல் செய்வது உங்களை அமைதியாக உணரவைப்பதோடு, உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கின்றது. நீச்சல் ரத்த அழுத்தத்தை சமன்செய்யவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. பளுதூக்குவது உங்களது இதய துடிப்பை அதிகரிக்காது, அதனால் முடிந்த அளவு எடையை நீங்கள் தூக்கி பயிற்சி செய்யலாம். அடுத்ததாக ஸ்குவாட்ஸ் போன்ற சிட்டிங் பயிற்சிகளை செய்வது ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, உங்கள் உடல் எடை குறைப்பிலும் உதவி புரிகிறது.
மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ